in

பாம்பன் ராமேஸ்வரம் மண்டபம் ஆகிய பகுதிகளில் இன்று மீன் விலை நிலவரம்

பாம்பன் ராமேஸ்வரம் மண்டபம் ஆகிய பகுதிகளில் இன்று மீன் விலை நிலவரம்

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ராமேஸ்வரம் மண்டபம் துறைமுகங்களில்
இன்று மீன்களின் விலை நிலவரம்

சீலா மீன் ஒரு கிலோ 900 முதல் 1000 ரூபாய்க்கும், பாறை மீன் 450 ரூபாய்க்கும், நகரை மீன் ஒரு கிலோ 220 கிளி மீன் 550 ரூபாய்க்கும் முரல் மீன் 360 க்கும் ஊளி மீன் 200 ரூபாய்க்கும்

வெள மீன் 350 ரூபாய்க்கும் மட்ட சிங்கி 500 ரூபாய்க்கும் கொடுவா மீன் ஒரு கிலோ 600 ரூபாய்க்கும் மாவுளா மீன் 450 ரூபாய்க்கு பார் மீன் 180 க்கும்
சாலை மீன் 100 ரூபாய்க்கும் வாழமுரல் மீன் 350 ரூபாய்க்கும் குமுளா மீன் 200 க்கும் வெள்ள வாவல் மீன் 900 முதல் 1200 ரூபாய்க்கும் கட்டிகாளை மீன் 900 ரூபாய்க்கு உருட்டு நகரை 250 ரூபாய்க்கும் தடியன் மீன் 450 க்கும் களவா மீன் 550 ரூபாய்க்கு நண்டு 400 ரூபாய்க்கு குரங்கு சுறாமீன் 200 ரூபாய்க்கும் நெத்திலி மீன் 250 ரூபாய்க்கும் திருக்கை மீன் 180 ரூபாய்க்கு வாலை மீன் 200 ரூபாய்க்கு பாம்பன் ராமேஸ்வரம் மண்டபம் கடற்கரை துறை துறைமுகங்களில் இன்று விற்பனையானது மீன்களை உள்ளூர் வியாபாரிகள் போட்டி போட்டு மீன்களை விற்பனைக்காக வியாபாரிகள் எடுத்துச் சென்றனர்.

பாம்பன் ராமேஸ்வரம் மண்டபம் துறைமுகங்களில் இருந்து விசை படகு நாட்டுப்படகுகளில் பிடித்து வரப்பட்ட மீன்களை உள்ளூர் வியாபாரிகளால் எடுக்கப்பட்டு மதுரை கோயம்புத்தூர் சேலம் திருச்சி திண்டுக்கல் கேரளா ஆகிய பகுதிகளுக்கு உள்ளூர் வியாபாரிகள் அனுப்பப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

What do you think?

வைகை ஆற்றை தூய்மை படுத்தும் தொடர் பணியின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா