வேதாரண்யம் அருகே விபத்து – நூலிழையில் உயிர் தப்பிய இளைஞர்: சிசிடிவி காட்சி வைரல்
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே மறைஞாயநல்லூர் பிரதான சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர், கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த அரசு பேருந்தில் மோதி விபத்துக்குள்ளானார்.
இந்த விபத்தில் இளைஞர் பேருந்தின் சக்கரத்தில் சிக்காமல் அதிர்ஷ்டவசமாக நூலிழையில் உயிர் தப்பினார். விபத்து நடந்த காட்சிகள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.
தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

