தலையில் துண்டு போட்டு விவசாயிகள் தர்ணா போராட்டம்…
விவசாய கடனை முழுமையாக ரத்து செய்ய கோரிக்கை நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தர்ணா ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் தமிழக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதியின் படி விவசாயிகளுக்கான விவசாய கடன்களை முழுமையாக ரத்து செய்யக்கோரி தர்னா ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக சிறு குறு விவசாயிகளுக்கு வேளாண்மை கூட்டுறவு வங்கியில் உள்ள கடனை முழுமையாக ரத்து செய்ய கோரியும் ஐந்து ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 50% கடன்களை ரத்து செய்யக் கோரியும் தமிழக அரசு உடனடியாக தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் விவசாயிகளுக்கான விவசாய கடன்களை ரத்து செய்ய கோரி இன்று நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தலையில் துண்டு போட்டு தர்ணா ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டினர்.
தமிழக அரசு விவசாய சங்கங்களின் கோரிக்கையை ஏற்று கடன்களை ரத்து செய்யா விட்டால் வருகின்ற 30 ஆம் தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு விவசாய சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
பேட்டி: குணசேகரன்.


