படகு விபத்தில் உயிரிழந்தவரின் உடல் வருகை
வியட்நாம் பகுதியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த நபரின் உடல் திருவண்ணாமலைக்கு வருகை…..
திருவண்ணாமலை நகரம் ஆனைக்கட்டு தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார் (51). இவர் லாவா என்ற நிறுவனத்தின் பொருட்களை விநியோகம் செய்யும் தொழில் செய்து வருகிறார். திருவண்ணாமலை மட்டுமல்லாது பல்வேறு ஊர்களுக்கு சென்று பொருட்களை விநியோகம் செய்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 8ம் தேதி லாவா என்ற நிறுவனத்தின் மூலம் வியட்நாம் பகுதிக்கு சுற்றுலா செல்கிறார். கடந்த 11ம் தேதி வியட்நாம் பகுதியில் படகில் சவாரி செய்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு ஏராளமானோர் பலியாகினர்.

இந்த விபத்து குறித்து பிரதமர் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது ஆதங்கத்தை தெரிவித்தனர். மேலும் திருவண்ணாமலை ஆனைக்கட்டு தெருவை சேர்ந்த ரவிசங்கரின் உடல் இன்று அவரது சொந்த வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அவரது குடும்ப முறைப்படி இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக ரவிசங்கரின் உறவினர்கள் தெரிவித்தனர்.


