in

நள்ளிரவில் மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி

நள்ளிரவில் மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி

 

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நள்ளிரவில் மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி…..

சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் வலியால் காத்திருக்கும் நிலையில் கண்டு கொள்ளாத மருத்துவர்கள்….. மருத்துவர்கள் பற்றாக்குறையை போக்க வேண்டுமென நோயாளிகள் கோரிக்கை…..

திருவண்ணாமலை நகரில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. உள் நோயாளிகள் பிரிவு, புற நோயாளிகள் பிரிவு, மகப்பேறு மருத்துவம், அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு அனுதினமும் 2000 முதல் 3000 நபர்கள் வந்து செல்கின்றனர்.

குறிப்பாக அவசர சிகிச்சை பிரிவில் அனுதினமும் பகல் மற்றும் இரவு வேலைகளில் ஏராளமானோர் சிகிச்சைக்காக வருகின்றனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு கர்ப்பிணிப் பெண்ணிற்கு பாம்பு கடித்தது என்பதால் அவசர சிகிச்சை பிரிவில் இருந்த அனைத்து மருத்துவர்களும் அந்த பெண்ணிற்கு சிகிச்சை அளிக்க சென்றுள்ளனர்.

அப்போது காய்ச்சல் காரணமாக இரண்டு பெண்கள், நெஞ்சுவலி ஏற்பட்டு வந்த ஒருவர் என ஏராளமானோர் சிகிச்சைக்காக காத்திருந்தனர். ஆனால் நள்ளிரவு 2 மணி வரை மருத்துவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் இல்லாமல் இருந்ததால் நோயாளிகள் மிகுந்த வேதனை அடைந்தனர்.

ஒவ்வொரு நாளும் அவசர சிகிச்சை பிரிவில் நள்ளிரவில் இதே போன்ற நிலை தான் நீடிப்பதாகவும், சிகிச்சைக்கு வந்தால் மருத்துவர்கள் இல்லாமல் இருப்பதாகவும், செவிலியர்கள் தங்களுக்கு ஊசி போட்டுவிட்டு அனுப்பி விடுவதாகவும் நோயாளிகள் குற்றம் சாட்டினர்.

மேலும் நள்ளிரவு காவல் பணியில் இருந்த காவலர் ஒருவர் இரண்டு மருத்துவர்கள் தான் இருப்பதாகவும், ஆதலால் இதுபோன்ற நிலை உள்ளதாகவும் தகவல் அளித்தார்.

மேலும் இது குறித்து மருத்துவர்களிடம் கேட்டபோது அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும் போதிய அளவு மருத்துவர்கள் இருந்தால் இது போன்ற நிலை இருக்காது என்று மருத்துவர்கள் தகவல் அளித்தனர்.

What do you think?

அண்ணாமலையார் கோவில் பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

சிங்க பெண் காவல்துறையினர் குறித்து கோவை இல்முதீன் சர்ச்சை கருத்து