புதுச்சேரியில் தவறவிட்ட 45 லட்ச ரூபாய் மதிப்பிலான 240 செல்போன்களை சைபர் கிரைம் போலீஸார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
புதுச்சேரியில் பேருந்து நிலையம்,வர்த்தக நிறுவனங்கள், பொது இடங்களில் தவறவிட்ட மற்றும் திருடப்பட்ட செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் பணியை சைபர் கிரைம் போலீஸார் தொடர்ந்து. செய்து வருகின்றனர்.
இதனிடையே செல்போன்களை தவறவிட்டது குறித்து காவல் நிலையங்களில் தினந்தோறும் தொடர்ந்து ஏராளமான புகார்கள் வந்ததையடுத்து, இப்புகார்கள் மீது சைபர் கிரைம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அதன்படி ரூபாய் 45 லட்சம் மதிப்பிலான 240 செல்போன்கள் ஒரே மாதத்தில் மீட்கப்பட்டது. இவற்றில் சுமார் 163 செல்போன்கள் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த புகார்தாரர்களுக்கு சொந்தமானவை. மீதமுள்ள செல்போன்கள் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த புகார்தாரர்களுடையது எனவும் மீட்கப்பட்ட செல்போன்களின் மதிப்பு 45 லட்சத்து 40 ஆயிரத்து 400 ரூபாய் என காவல்துறை தரப்பில் தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில் மீட்கப்பட்ட 240 செல்போன்களை ஒப்படைக்கும் நிகழ்வு புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் நடைபெற்றது. இதில் செல்போனை தவறவிட்ட உரிமையாளர்களிடம் அவர்களது தொலைபேசியின் ஆவணங்கள் முழுமையாக சரிபார்க்கப்பட்ட பின்னர் ஒப்படைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து முதுநிலை கவல்கண்காணிப்பாளர் ராகவ் கூறும்போது பொதுமக்கள் இழந்த செல்போன்களை நவீன தொழில்நுட்ப உதவியுடன் கண்டறிந்து .
மீட்டெடுப்பதில் சைபர் குற்றப்பிரிவு தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. CEIR (Central Equipment Identity Register) போர்டல் மூலம் செல்போன்களை மீட்டெடுப்பதில் புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையம் முதல் இடத்தை பெற்றுள்ளது.
இதன்மூலம், செல்போன்கள் காணாமல் போனால் அல்லது திருடப்பட்டாலோ பொதுமக்கள் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையம் அல்லது சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும், என்றார்.
மேலும், இணையவழி மோசடிகள் மற்றும் சைபர் குற்றங்கள் தொடர்பாக பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இணையவழி மோசடி சம்பவங்கள் தொடர்பாக உடனடியாக தேசிய இணையவழி குற்ற உதவி எண் 1930, தேசிய இணையவழி குற்றப் புகார் cybercrime.gov.in என்ற இணையதளம் மூலம் புகாரளிக்கலாம் என்றும் தெரிவித்தார்.


