in

ஆதி அருணாச்சலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

ஆதி அருணாச்சலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

 

ஆதி அருணாச்சலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகததையொடடி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா என பக்தி முழக்கமிட்டு சாமி தரிசனம்……

திருவண்ணாமலை அடுத்த அடிஅண்ணாமலை கிராமத்தில் பழமை வாய்ந்த ஆதி அருணாச்சலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா என பக்தி முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை அடுத்த அடிஅண்ணாமலை கிராமத்தில் உள்ள ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த ஆதி அருணாச்சலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு இந்து சமய அறநிலைத்துறை மூலம் பூர்வாங்க பணிகள் நடைபெற்று வந்தது.

இந்த பணிகள் நிறைவு பெற்று ஆதி அருணாச்சலேஸ்வரர் கோவில் அருகே யாக சாலைகள் அமைக்கப்பட்டு கடந்த மூன்று நாட்களாக முதல் காலம், இரண்டாம் காலம், மூன்றாம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று கோ பூஜை மற்றும் நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

பின்னர் யாக சாலையில் வைக்கப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோவிலை சுற்றி வந்து கோவிலுக்கு மேலே உள்ள கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா என பக்தி முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.

குறிப்பாக ட்ரோன் மூலம் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

What do you think?

சேலம் சௌகியா வராஹி அம்மன் ஆலயத்தில் ஆஷாட நவராத்திரி 9 ஆம் நாள் விழா !

புவனகிரி அருகே பு. ஆதிவராகநத்தம் பகுதியில் முத்துமாரியம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்