in

அதிமுக பிரச்சாரத்தில் ஓட்டு கேட்கும்போது மட்டும்தான் வருகிறீர்கள் என்று சத்தமிட்டதால் பரபரப்பு


Watch – YouTube Click

ஆடு கொடுத்தோம், மாடு கொடுத்தோம், கோழிக்குஞ்சு கொடுத்தோம் ஆட்டுக்கொட்டகை கொடுத்தோம், மாட்டு கொட்டகை கொடுத்தோம் மணப்பாறை பகுதியில் அதிமுக பிரச்சாரத்தில் பட்டியலிட்ட முன்னாள் அமைச்சர்

ஓட்டுகேட்கும்போது மட்டும்தான் வருகிறீர்கள் அப்புறம் எட்டிப்பார்ப்பதே கிடையாது குற்றஞ்சாட்டிய பொதுமக்கள்.

கரூர் பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எல். தங்கவேல் திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காடப்பிச்சம்பட்டியில் துவங்கி மானாங்குன்றம், புத்தாநத்தம், இடையபட்டி, காவல்காரன்பட்டி, பண்ணப்பட்டி, பன்னாங்கொம்பு, சாம்பட்டி, மலையடிப்பட்டி, வேங்கைக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

வேட்பாளருடன் பிரச்சாரம் மேற்கொண்ட முன்னாள் எம்பியும் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான குமார் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் புத்தாநத்தத்தில் பேசுகையில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை இரண்டாவது முறையாக ஜனாதிபதி ஆக்க ஜெயலலிதா சம்மதம் தெரிவித்தார். ஆனால் திமுகவினர் தான் தடுத்தார்கள் என்பதை இந்த சமுதாய மக்கள் தெரிந்து கொள்ளவேண்டும் என மத ரீதியிலான பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
பின்னர் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பேசியபோது,
திமுக ஆட்சியில் விலைவாசி உயர்ந்து விட்டதால் குடும்பம் நடத்துவதற்கே சிரமமான சூழ்நிலை உள்ளது. ‌ வேலை வாய்ப்புகள் இல்லை. கொலை, கொள்ளை, கற்பழிப்புகள், பாலியல் பலாத்காரம் அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது. ஜெயலலிதா இருந்தபோது சொன்னதையும் நிறைவேற்றினார் சொல்லாதையும் நிறைவேற்றினார்.

தாலிக்கு தங்கம் கொடுத்தோம். திருமண உதவித் தொகை கொடுத்தோம், கிராமத்தில் ஆடு கொடுத்தோம், மாடு கொடுத்தோம், எடப்பாடியார் வந்து கோழிக்குஞ்சு கொடுத்தார். ஆட்டுக்கொட்டையை கொடுத்தார், மாட்டு கொட்டகை கொடுத்தார் கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.18,000 பணம் கொடுத்தோம். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஸ்கூட்டி வாங்க ரூ.25,000 கொடுத்தோம், பள்ளிக்குச் செல்லக்கூடிய மாணவர்களுக்கு நோட்டு, பேனா, பென்சில் என எல்லாம் கொடுத்து படிக்க சொன்னோம்.

இதுமட்டுமல்லாது இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 58 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணிக்கணினி கொடுத்து படிக்க வைத்த அரசு அதிமுக அரசு. இன்றைய திமுக அரசு குவாட்டரை கையில் கொடுத்து குடிக்க சொல்லி வேடிக்கை பார்க்கிறது. இந்தியாவிலேயே போதை கலாச்சாரம் அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடு என்றாகிவிட்டது. நாங்கள் மக்களோடு கூட்டணி வைத்துள்ளோம். அதிமுக அரசு கொண்டு வந்த எல்லா திட்டங்களையும் நிறுத்திவிட்டு இதற்கு பெயர் திராவிட மாடல் அரசு என்கின்றனர்.

தொடர்ந்து வேட்பாளர் தங்கவேல் பொதுமக்களிடையே வாக்குகள் சேகரித்து பேசினார். பிரச்சாரத்தின்போது பெண்கள் ஆர்த்தி எடுத்து வரவேற்பளித்தனர்.
காவல்காரன்பட்டியில் பிரச்சாரம் மேற்கொண்டபோது பெண்கள் ஒட்டு கேட்கும்போது மட்டும் வருகிறார்கள் பின்னர் எட்டியே பார்ப்பதில்லை. மக்கள் என்ன செய்கிறார்கள் எப்படி இருக்கிறார்கள் என்று பார்ப்பதில்லை என்று சத்தமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Watch – YouTube Click

What do you think?

கடலூர் மாவட்டத்தில் திரு அண்ணாமலை திறந்த வேனில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்

ஆதரவு கொடுக்க கூடாது …தளபதி strict ஆர்டர்…vote போடலாமாங்க