in

வாக்கு எண்ணும் இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு


Watch – YouTube Click

வாக்கு எண்ணும் இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

 

புதுச்சேரி பராளுமன்ற தொகுதியில் 4 பிராந்தியங்களிலும் 967 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு தேர்தல் நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும் போதே பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

6 மணிக்கு மேலாக டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு நடந்தது. இதனால் பல வாக்குச்சாவடிகளில் இரவு 8 மணி வரையிலும் வாக்குப்பதிவு நீடித்தது.

வாக்குப்பதிவு முடிந்ததும் வேட்பாளர்கள் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்றி லாஸ்பேட்டை மகளிர் தொழில்நுட்ப கல்லூரி, மற்றும் மோதிலால் நேரு பாலிடெக்னின் கல்லுரிக்கு கொண்டு செல்லப்பட்டது. நள்ளிரவு வரை வாக்குப்பதிவு எந்திரங்கள் வந்து சேர்ந்தது.

இந்த எந்திரங்கள் தொகுதி வாரியாக வரிசையின்படி ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டது. இங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டு, கட்டுப்பாட்டு அறை மூலமாக கண்காணித்து வருகின்றனர்.

புதுச்சேரியில் 967 வாக்குச்சாவடிகள் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் இங்குள்ள பாதுகாப்பு அறைகளில் வைத்து சீல் வைக்கப்பட்டுள்ளன.
இங்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

உள்ளூர் போலீஸ்,ரிசர்வ் பட்டாலியன் மற்றும் துணைராணுவ படையினர் ஜூன் நான்காம் தேதி வரை இங்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அனைத்து பகுதியிலும் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் காரைக்காலில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியிலும், மாகி மற்றும் ஏனாமில் பதிவான வாக்குகள் அங்குள்ள நிர்வாக அலுவலகங்களிலும் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.


Watch – YouTube Click

What do you think?

திருநிலை நாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ பிரமபுரீஸ்வரர் திருக்கல்யாண வைபவம்

செஞ்சியில் அரசு பேருந்து மோதிய விபத்தில் மருத்துவமனை ஊழியர் பலி