சேலம் சௌகியா வராஹி அம்மன் ஆலயத்தில் ஆஷாட நவராத்திரி 9 ஆம் நாள் விழா !
சேலம் கொண்டப்ப நாயக்கன்பட்டி ஸ்ரீ சௌகியா வராஹி அம்மன் ஆலயத்தில் ஆசாட நவராத்திரி விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது இதன் முக்கிய நிகழ்வான பால்குட ஊர்வலம் குருதி பூஜை தாலாட்டு சேவை நடைபெற்றது.
இதனை முன்னிட்டு மாலை அணிந்து விரதம் மேற்கொண்ட பக்தர்கள் பால்குடங்களை தலைமையில் சுமந்து கொண்டு ஊர்வலமாக வந்தனர் பின்னர் பக்தர்கள் தங்கள் கைகளாலே மூலவர் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர் தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது பிறகு உற்சவர் ஸ்ரீ வராகி அம்மன், ஸ்ரீ காளியம்மன் அம்மனை அபிஷேக கேடயத்தில் நிறுத்தி பல்வேறு வகையான பழங்கள் பஞ்சாமிர்தம் தேன் நெய் பால் தயிர் இளநீர் மஞ்சள் திருமஞ்சனம் குங்குமம் சந்தனம் பன்னீர் போன்றவற்றால் சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றதும் சொர்ணாபிஷேகம் செய்து கலசத்தில் உள்ள புனித நீர் கொண்டு கலசபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் மூலவர் அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்து நகை ஆபரணங்களால் ஜோடனை அலங்காரம் செய்து பதினாறு திருகரங்களுடன் கையில் ஈட்டிக் கொண்டு அசுரனை வதம் செய்யும் தேவியாக ஸ்ரீசௌகியா வராஹி அம்மன் காட்சியளிக்க உற்சவர் ஸ்ரீ வராகி தேவியும் காளியம்மனும் தனித்தனியே ஊஞ்சலில் கொலு இருக்கச் செய்து புதுப்பட்டாடையுடன் மலர்மாலைகள் நகை ஆபரணங்கள் அணிவித்து சிறப்பாக அலங்கரித்ததும் மூலவர் மற்றும் உற்சவர் அம்மனுக்கு தேங்காய் பழம் உடைத்து பிரசாதங்கள் நெய்வேத்தியம் செய்து மஹா கற்பூர தீபாராதனை காட்டப்பட்டது.

பின்னர் மூலஸ்தானம் எதிரே ஸ்ரீ வராகி அம்மனை நிறுத்தி வண்ண மலர்களால் அலங்கரித்து தீப்பந்தங்கள் கொளுத்தி வைக்கப்பட்டு குருதி பூஜை நடைபெற்றது முதலாவதாக அம்மனுக்கு தேங்காய் பூசணிக்காய் கற்பூர தீபம் ஏற்றி திருஷ்டி கழிக்கப்பட்டதும் தொலைத்து வைக்கப்பட்டுள்ள குங்குமத்தால் அம்மனுக்கு குருதி பூஜை நடைபெற்றது.
பிறகு பக்தர்கள் தட்டு சீர்வரிசை பொருட்கள் மலர் மாலைகளை ஊர்வலமாக தலையில் சுமந்து கொண்டு பம்பை நாதஸ்வரம் மேளதாளங்கள் முழங்க ஆலயத்திற்கு எடுத்து வந்ததும் உற்சவர் அம்மனை சிறப்பாக அலங்கரித்து தீபாராதனை காட்டப்பட்டது.
பிறகு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்று பக்தர்கள் ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.
கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


