ஆனி மாத பௌர்ணமி லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம்
ஆனி மாத பௌர்ணமி தினமான நேற்று இரவு லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம்……
கிரிவலம் முடிந்த பக்தர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல இரயில் நிலையத்தில் குவிப்பு…..
ஆனி மாத பௌர்ணமி தினமான நேற்று இரவு லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்து 14 கிலோமீட்டர் கிரிவலம் மேற்கொண்டனர்.
ஆனி மாத பௌர்ணமி நேற்று அதிகாலை 4:22 மணிக்கு தொடங்கி இன்று காலை 6:11 மணிக்கு நிறைவடைய உள்ளதால் பக்தர்கள் நேற்று இரவு கிரிவலம் மேற்கொள்ளலாம் என்று அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று அதிகாலை அண்ணாமலையார் கோவில் நடை திறக்கப்பட்டு ஆகம விதிப்படி அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து காலை முதலே பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்து 14 கிலோமீட்டர் கிரிவலம் மேற்கொண்டனர்.

விடிய விடிய கிரிவலம் மேற்கொண்ட பக்தர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் குவிந்தனர். அப்போது விழுப்புரத்திலிருந்து காட்பாடி செல்லும் பயணிகள் ரயில் வந்தவுடன் பக்தர்கள் ஒருவருக்கு ஒருவர் முண்டியடித்துக் கொண்டு ரயிலில் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒவ்வொரு மாதமும் இதே போன்று நிலை ஏற்படுவதால் கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


