in

சென்ட்ரல் லயன்ஸ் சங்க புதிய பொறுப்பாளர்கள் பணியேற்பு விழா

சென்ட்ரல் லயன்ஸ் சங்க புதிய பொறுப்பாளர்கள் பணியேற்பு விழா

 

மயிலாடுதுறை சென்ட்ரல் லயன்ஸ் சங்க புதிய பொறுப்பாளர்கள் பணியேற்பு விழா நடைபெற்றது.

மயிலாடுதுறை பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் சார்பில்,மயிலாடுதுறை சென்ட்ரல் லயன்ஸ் சங்கத்தின் 2026-2027 ஆம் ஆண்டுக்கான புதிய பொறுப்பாளர்கள் பணியேற்பு விழா மயிலாடுதுறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு மாவட்ட ஆளுநர் மோகன்ராஜ், மாவட்ட முதல் பெண்மணி ஜெயந்தி மோகன்ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு புதிய பொறுப்பாளர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.

மாவட்ட முதல் துணை ஆளுநர் சிவசுப்பிரமணியன் புதிய பொறுப்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார் தலைமைத்துவ ஒருங்கிணைப்பாளர் அருணாச்சலம் புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து வைத்தார்.

தொடர்ந்து ஆண்டுக்கான தலைவராக அனுராதா, செயலாளராக கமலா, பொருளாளராக மலர்விழி ஆகியோர் உறுதிமொழி ஏற்று மெழுகுவர்த்தி ஏற்றி பொறுப்பேற்றனர்.

விழாவில் விவசாயிகளுக்கு தார்ப்பாய்கள் வேளாண் கருவிகள் மற்றும் முதியோர் இல்லத்திற்கு மளிகை பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதில் மாவட்ட அமைச்சரவை பொறுப்பாளர்கள், மண்டல தலைவர்கள், வட்டார தலைவர்கள், அனைத்து லயன்ஸ் சங்க நிர்வாகிகள்,உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

What do you think?

தஞ்சாவூர் பெரியகோயில் மஹாவாராஹி அம்ம ஆஷாட நவராத்திரி விழா