ஆவணி மாதம் பௌர்ணமி சிறப்பு மகாயாகம்
குத்தாலம் திரௌபதி அம்மன் ஆலயத்தில் ஆவணி மாதம் பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு மகாயாகம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் செட்டியார் வடக்கு வீதியில் மிகவும் பழமை வாய்ந்த திரௌபதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் மாதம்தோறும் பௌர்ணமி தினத்தன்று சிறப்பு யாகம் நடைபெறுவது வழக்கம் அதன்படி இன்று ஆவணி மாதம் பௌர்ணமியை முன்னிட்டு ஆலயத்தில் கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், துர்கை லக்ஷ்மி, சரஸ்வதி மூலமந்திர ஹோமம் ஆகியவை நடைபெற்றது.
தொடர்ந்து பூர்ணாஹுதிக்கு பிறகு யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் மேளதாளங்கள் முழங்க கோயிலை வலம் வந்தது.

யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்டு திரௌபதி அம்மனுக்கு கட அபிஷேகம் நடைபெற்று.
பின்னர் மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது.

