களிமண்குண்டு காந்தாரி அம்மன் ஆலயத்தில் 156ஆம் ஆண்டு முளைக் கொட்டு பூக்குழி பெருவிழா
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன்
இராமநாதபுரம் மாவட்டம் களிமண் குண்டு கிராமத்தில் காந்தாரியம்மன் ஆலயத்தில் 156ஆம் ஆண்டு முளைக்கொட்டு மற்றும் பூக்குழி பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
காந்தாரியம்மன் சிவபெருமானை காணவில்லை என்று சிதை ஏறியதாகவும் பின்பு சிவபெருமானை கண்டவுடனும் மற்றொருபுறம் பக்தர்கள் துலுமா இடித்து வழிபடுவதையும் கண்ட காந்தாரியம்மன் மீண்டும் உயிர் பெற்றதாகவும் .

இதனால் இந்த அம்மனுக்கு காந்தாரி என பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது முன்னதாக கடற்கரையில் இருந்து கரகமானது ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு அம்மனிடம் வைத்து வழிபாடு செய்தனர் .
பின்னர் எட்டு நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் அம்மனுக்கு பூக்குழி இறங்கியும், அழகு குத்தியும்,அக்னி சட்டி, கரகம், காவடி, கரும்பாலை தொட்டி, குழந்தைகளை விற்று வாங்குதல், உள்ளிட்ட நேர்த்தி கடன்களை செலுத்தினர்.
தொடர்ந்து பெண்கள் பொங்கல் வைத்தும் துழுமா இடித்தும் அம்மனிடம் சமர்ப்பித்து வழிபாடு செய்தனர் தொடர்ந்து பெண்கள் கும்மியடித்தும், ஆண்கள் ஒயிலாட்டம் ஆடியும், தாரை தப்பட்டைகள் முழங்க பூங்கரகம் முன்னே செல்ல வழி நெடுகிலும் பக்தர்கள் மஞ்சள் நீர் ஊற்ற கரகமானது ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடற்கரையில் சமர்பித்தனர் .
பின்னர் அம்மனுக்கு பல நறுமணத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றதோடு மாலை மலர்களால் அமர்ந்த திருமேனியோடு சந்தன காப்பில் பலவித நறுமண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு விசேஷ அலங்காரத்தில் காட்சியளித்த காந்தாரி அம்மனை பலரும் மனம் உருகி வழிபாடு செய்தனர் மற்றொருபுறம் நாள் முழுவதும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது நிகழ்ச்சி ஏற்பாட்டினை களிமண் குண்டு கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்


