in

டாஸ்மார்க் ஊழியர்களின் போராட்டங்கள் எதிர்க்கட்சிகளின் தூண்டுதல்

டாஸ்மார்க் ஊழியர்களின் போராட்டங்கள் எதிர்க்கட்சிகளின் தூண்டுதல்

 

டாஸ்மார்க் ஊழியர்களின் போராட்டங்கள் எதிர்க்கட்சிகளின் தூண்டுதல்; தொழிலாளர்கள் சூழ்ச்சிக்கு பலியாக வேண்டாம்” – அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை!

தொழிலாளர்களின் ஊதிய உயர்வு தொடர்பான கோரிக்கைகள் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்களின் போராட்டங்கள் குறித்த கேள்விக்கு…

நான் தொழிலாளர்களுடன் நேரடியாக அமர்ந்து பேசினேன். தற்போதைய அரசின் நிதிச் சூழலைப் புரிந்துகொண்டு, இந்தத் துறையைச் சீரமைக்க அரசு எடுத்து வரும் அக்கறையான முயற்சிகளுக்கு அவர்கள் தங்களது நன்றியையும் வரவேற்பையும் தெரிவித்துள்ளனர். பெரும்பாலான தொழிலாளர்கள் இன்னமும் அரசின் மீது முழு நம்பிக்கை வைத்துத் தங்களது பணிகளைத் தொடர்ந்து வருகின்றனர்.

மேலும், இந்த விவகாரத்தில் அரசியல் சூழ்ச்சி இருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், “அரசு இந்தத் துறையைச் சீரமைத்துவிட்டால் தங்களுடைய பெயர் வளராது என்ற எண்ணத்தில், சில எதிர்க்கட்சிகள் தொழிலாளர்களைத் தூண்டிவிட்டுத் தவறான வழியில் கொண்டு செல்ல முயல்கின்றனர். போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் இத்தகைய சூழ்ச்சிகளுக்குப் பலியாக வேண்டாம். அது தேவையற்ற பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

தொழிலாளர்கள் கடந்த 20 ஆண்டுகளாகக் காத்துக்கொண்டிருந்த இ.எஸ்.ஐ (ESI) மருத்துவக் காப்பீட்டு வசதியை, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.

அரசும் தொழிலாளர்களும் இணைந்துதான் இந்தத் துறையை மேம்படுத்த வேண்டும். எனவே, தொழிலாளர்கள் தங்களுக்குப் பின்விளைவுகளை ஏற்படுத்தும் போராட்டங்களைக் கைவிட்டு, அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

What do you think?

நூற்றாண்டு பழமையான ஸ்ரீ காளியம்மன், பகவதியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா

மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் காவல்துறையினரின் செயல் நெகிழ்ச்சி