in

விரைவில் தலைகள் சிதறும் எஸ்பி புகைப்படத்துடன் மிரட்டல்


Watch – YouTube Click

விரைவில் தலைகள் சிதறும் எஸ்பி புகைப்படத்துடன் மிரட்டல்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சியை சேர்ந்தவர் முத்துக்குமார் லாரி டிரைவர். இவரது மனைவி சரஸ்வதி இவர்களது மகன்கள் மூத்தவர் தங்கவேல், இளையவர் ஜெகன் என்கின்ற கொம்பன் ஜெகன் (30). இவருக்கு மனைவி ஒரு மகள் உள்ளனர்.

12ம் வகுப்பு வரை படித்தவர் ஜெகன், திருச்சி டோல்கேட், மண்ணச்சநல்லூர், பாண்டிச்சேரி, சேலம், நாமக்கல் போன்ற இடங்களில் நேரடியாகவும், கூலிப்படையாகவும், 11 கொலை வழக்குகளில் தொடர்புடையவர்.
மேலும் கூலிப்படையாக செயல்பட்டது, கட்டப்பஞ்சாயத்து, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதனால், அவர் தலைமறைவாக இருந்தார்.

இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவுப்படி அமைக்கப்பட்ட தனிப்படை போலீசாருக்கு, ரவுடி ஜெகன் சிறுகனூர் அருகே, சனமங்கலம் வனப்பகுதியில் பதுங்கி காட்டு விலங்குகளை வேட்டையாடி கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் தனிப்படை போலீசார், அந்தப்பகுதிக்கு சென்று ரவுடியை சுற்றி வளைத்தனர். அப்போது போலீசார் பிடிக்க முயன்ற போது, எஸ்.ஐ. வினோத்யை ரவுடி ஜெகன் அரிவாளால் வெட்டி விட்டு தப்பிக்க முயன்றார். உடனே, தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் கருணாகரன் பாதுகாப்புக்காக வைத்திருந்த கைத்துப்பாக்கியால் சுட்டார்.

அதில், ரவுடி ஜெகன் மீது 2 குண்டுகள் பாய்ந்து காயமடைந்தார். போலீசார் அவரைப் பிடித்து லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். போலீசார் சுட்டதில் படுகாயமடைந்த, ரவுடி ஜெகன் கடந்த வருடம் 22.11.2023 ஆம் தேதி உயிரிழந்தார்.

இந்நிலையில் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு இன்ஸ்டாகிராமில் ரவுடி ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். ஜெகன் கூட்டாளியோ உடன் உள்ளவரோ ஒருவர் இன்ஸ்டாகிராமில் திருச்சி மாவட்ட எஸ்பி தலை சிதறும் என புகைப்படத்துடன் பதிவிட்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மிரட்டல் விடுத்த நபரை தேடி வருகின்றனர். ரவுடி இன்ஸ்டாகிராம் தளத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் புகைப்படத்தை பதிவிட்டு ‘விரைவில் தலைகள் சிதறும், எனக் குறிப்பிட்டுள்ளது காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


Watch – YouTube Click

What do you think?

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஆட்சித் தலைவர் இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் முரளிதர் ஆய்வு

அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசின் வெளிச்சம் திட்டத்தின் கீழ் சிறப்பு கண் மருத்துவ முகாம்