in

ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயம் மகா கும்பாபிஷேகம்

ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயம் மகா கும்பாபிஷேகம்

 

மதுராந்தகம் அருகே அருள்மிகு ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயம் ஜீர்ணோத்தாரண அஷ்டபதன மகா கும்பாபிஷேகம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த தண்டலம் கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் புதிதாக கட்டி முடிக்கப்பட்டு பஞ்ச வர்ணங்கள் பூசி.

ஜீர்னோதாரண அஷ்டபந்தனை மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இவ்விழாவில் சிவாச்சாரியார்கள் மூன்று நாட்களுக்கு முன்பாகவே யாக சாலைகள் அமைத்து கணபதி பூஜை கோ பூஜை, லட்சுமி பூஜை என விசேஷ பூஜைகள் செய்யப்பட்டது.

பின்பு கிராம பொதுமக்கள் முன்னிலையில் யாக சாலையிலிருந்து கலசங்கள் புறப்பட்டு கோவிலை வலம் வந்து விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தீபாரதனையும் காண்பிக்கப்பட்டு பின்பு பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

இழப்பீடு கோரி ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம்

ஸ்ரீ தாய் மூகாம்பிகை ஆலய கும்பாபிஷேகத்திற்கு சீர்வரிசை