ஆடி 5 ஆம் வெள்ளி திருவிளக்கு பூஜை
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் நகரில் உள்ள கிராம தேவதை, மற்றும் குல தேவதையான அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் ஆடி பூரத்தையொட்டி விழா அம்மனுக்கு வளைகாப்பு விழா மற்றும் ஆடி 5 ஆம் வெள்ளியொட்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
காலை மங்கல இசையுடன் விழா தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன.
அந்த பின்னர், மாலை கோயில் வளாகத்தில் 108 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

அதன் பின்னர் அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்வு நடத்தப்பட்டது.
இந்த விழாவில் பங்கேற்ற கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பும் செய்து வைக்கப்பட்டது.
விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அங்காளமான வழிபட்டுச் சென்றனர்.


