in

சிங்க பெண் காவல்துறையினர் குறித்து கோவை இல்முதீன் சர்ச்சை கருத்து

சிங்க பெண் காவல்துறையினர் குறித்து கோவை இல்முதீன் சர்ச்சை கருத்து

 

தமிழகத்தில் சிங்க பெண் காவல்துறையினர், ரீல்ஸ் எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யும் பணிகளை மட்டுமே செய்து வருகின்றனர். கோவை உக்கடம் பகுதியில் மனிதநேய ஜனநாயக நீதிக்கட்சியின் நிறுவன தலைவர் கோவை இல்முதீன் பரபரப்பு பேட்டி.

கோவை மாவட்டம் உக்கடம் புல்லூக்காடு பகுதியில், மனித நேய ஜனநாயக நீதிக்கட்சியின், மாவட்ட அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து, இக்கட்சியின் நிறுவன தலைவர் கோவை இல்முதீன் இன்றைய அரசியல் நிலை குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்பொழுது அவர் கூறியதாவது..

கடந்த 45 நாட்களுக்கு முன்னர் கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வகையில், மனித நேய ஜனநாயக நீதிக்கட்சி என்ற அமைப்பை உருவாக்கினோம் இதனை தொடர்ந்து இன்று கோவையில் மாவட்ட அலுவலகம் திறக்க பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர், முன்னாள் முதல்வர், மு. க. ஸ்டாலின், மற்றும் முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், திமுக தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதற்க்கு அக்கட்சியின், கொள்கை மற்றும் கோட்பாடுகள் எங்களை ஈர்த்துள்ளது.

எனவே திமுக தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். இனி நடைபெறும் உள்ளாட்சி தேர்தல், ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற உள்ள சட்ட மன்ற தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து பொதுமக்களை சந்தித்து பேச உள்ளதாக தெரிவித்தார்.

தொடர்த்து தமிழகத்தில் ஆட்சியமைத்துள்ள தவெக தலைமையிலான அரசு, தமிழகத்தில் முதற்கட்டமாக 717 மதுக்கடைகளை மூடியுள்ளது. அதற்க்கு நன்றிகளை தெரிவித்து கொள்வதாகவும், அடுத்த கட்டமாக தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத அரசாக இந்த தவெக அரசு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு இழுக்கு என்பது, தவெக நிர்வாகிகளால் தான் நடைபெறுகின்றது.

ஆனால் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறி வருகின்றதாக குற்றம் சாட்டினார். பெண்களை பாதுகாக்க சிங்க பெண் திட்டம் தமிழகத்தில் அறிமுக படுத்தியுள்ளதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, சிங்க பெண்கள் தட்டத்தின் கீழ் பணியாற்றும் காவலர்களும் பலர், ரீல்ஸ் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதுவா பெண்களுக்கான சுதந்திரம், இதுவா சிங்கபெண் காவல்துறையினரின் பணி, எனவே தடுப்புகளற்ற துறையாகவும், கேள்வி எழுப்ப திராணியற்ற அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகின்றது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் பொழுது, மனித நேய ஜனநாயக நீதிக்கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் அப்பாஸ், மாநில செயலாளர் ஹக்கீம், மாநில தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அன்வர் அஹமது, மாநில சிறுபான்மையின அணி செயலாளர் இஸ்மாயில், உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

What do you think?

நள்ளிரவில் மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி

படம் எப்படி இருக்கு! ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அதர்வா..