பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் நவநீத சேவை. இராஜ வீதிகளில் உலா வந்த பெருமாளை கண்டு ரசித்த பக்தர்கள்
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் சார்பில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் தஞ்சாவூர் மாநகரில் கருட சேவை மற்றும் நவநீத சேவை வெகு விமரிசையாக நடைபெறும்..
இதேபோல் இந்தாண்டு கருட சேவை நேற்று நடைபெற்றது. அதனை தொடர்ந்து இரண்டாம் நாளான இன்று 108 வைணவ தலங்களான நீலமேக பெருமாள், மாமனிக்குன்ற பெருமாள், வீர நரசிம்ம பெருமாள்கள் நவநீத சேவை வாகனத்தில் எழுந்தருளி இராஜ வீதிகளுக்கு வந்தடைந்தனர்.
அதனை தொடர்ந்து மாநகரில் பிரசித்தி பெற்று விளங்கும் வெங்கடேச பெருமாள் ஆலயம், கோதண்ட ராமர் ஆலயம், வரதராஜப் பெருமாள் ஆலயம், ப்ரசன்ன வெங்கடேச பெருமாள், கல்யாண பெருமாள் உள்ளிட்ட 27 ஆலயங்களில் இருந்து பெருமாள்கள் நவநீத அலங்காரத்தில் எழுந்தருளி இராஜ வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்த நவநீத சேவையை தஞ்சாவூர் மட்டும் இன்றி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து ஒரு இடத்தில் எழுந்தருளிய பெருமாள்களை தரிசனம் செய்தனர்.


