in

ஜனநாயகம் ரிலீஸ் ஆஃபர்! மொபைல் ஷோரூமில் அலைமோதிய மக்கள் கூட்டம்

ஜனநாயகம் ரிலீஸ் ஆஃபர்! மொபைல் ஷோரூமில் அலைமோதிய மக்கள் கூட்டம்

 

தஞ்சாவூரில் தனியார் மொபைல் ஷோரூமில் ஜனநாயகம் திரைப்படம் வெளியீடு முன்னிட்டு சிறப்பு சலுகையில் விற்பனை குவிந்த பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு செல்போன் ஸ்மார்ட் வாட்ச் இயர் போன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பொதுமக்கள் வாங்கி சென்றனர் பரபரப்பு.

தஞ்சாவூர் ஆத்துப்பாலம் பகுதியில் தனியார் மொபைல் சாதனங்கள் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் வெளியீடு முன்னிட்டு சிறப்பு சலுகையாக அறிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக காலையிலே ஏராளமான பொதுமக்கள் கடை முன்பு திரண்டு நின்றனர் கடை திறந்தவுடன் கடை உள்ளே நுழைவதற்கு முண்டி அடித்துக் கொண்டு பொருட்கள் வாங்க பொதுமக்கள் சென்றனர்.

இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது நீண்ட வரிசையில் நின்று செல்போன், ஸ்மார்ட் வாட்ச், இயர் போன் உள்ளிட்ட பல்வேறு மின்சாதன பொருட்கள் வாங்குவதற்காக காத்துக் கொண்டு வாங்கி செல்கின்றனர்.

What do you think?

நீதிமன்ற உத்தரவுப்படி பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் அழிப்பு

அரசு மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி