in

அரசுப் பள்ளி சிற்றுண்டியில் பல்லி: 11 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்

அரசுப் பள்ளி சிற்றுண்டியில் பல்லி: 11 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்

 

அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காலை சிற்றுண்டியில் பல்லி விழுந்த உணவை உட்கொண்ட 11 பள்ளி குழந்தைகள் வாந்தி மயக்கம் மேல் பள்ளிப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதி…

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கட்டமடுவு ஊராட்சி அயோத்தியாபட்டணம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 1- வகுப்பு முதல் 8 வகுப்பு வரை மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் இவர்களுக்கு 1 வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அரசு மூலம் காலை சிற்றுண்டி உணவு வழங்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் இன்று காலை சிற்றுண்டி உணவு 58 மாணவர்களில் முதல் வந்த மாணவர்கள் 11 பேர் உட்கொண்ட பொழுது 11 மாணவர்களுக்கும் சில நிமிடத்தில் வாந்தி மயக்கம் ஏற்பட்டது பின்னர் மயக்கம் அடைந்த மாணவர்களை சிகிச்சைக்காக மேல் பள்ளிப்பட்டு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காலை உணவில் உட்கொண்டதில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் காரணத்தை கண்டறிந்த பொழுது உணவில் பல்லி விழுந்தது தெரியவந்தது இந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் 11 மாணவர்களை சிகிச்சைக்காக அனுமதித்து தற்பொழுது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த திராவிட மாடல் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம் சிறப்பாக அதிகாரிகள் மூலம் கண்காணித்து தரமான உணவுகள் வழங்கப்பட்டு வந்தது தற்பொழுது தமிழ்நாட்டில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என கூறிவிட்டு மக்களை ஏமாற்றி வாக்கு பெற்றுக் கொண்டு ஆட்சிப் பொறுப்பில் அமைந்த பின்னர் பதவி சுகத்தை மட்டுமே அனுபவித்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் அதிகாரிகளை கண்டு கொள்ளாமல் மெத்தன போக்கில் அரசாங்கம் நடத்தி வருவதன் காரணத்தால் காலை உணவு தரமற்று வழங்கியதால் உணவில் பல்லி விழுந்தது தெரியாமல் அலட்சியமாக உணவு வழங்கப்பட்டுள்ளது அதிகாரிகளின் அலட்சியமே சம்பவத்திற்கு காரணம் என பெற்றோர்களும் பொதுமக்களும் குற்றச்சாட்டுகின்றனர்.

What do you think?

பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் நவநீத சேவை. இராஜ வீதிகளில் உலா வந்த பெருமாளை கண்டு ரசித்த பக்தர்கள்

உர விலை ஏற்றம், தட்டுப்பாடு எதிரொலி: விவசாயிகள் வேதனை