உர விலை ஏற்றம், தட்டுப்பாடு எதிரொலி: விவசாயிகள் வேதனை
உர விலை உயர்வு மற்றும் புற தட்டுப்பாடல் கடுமையாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு.
மேட்டூர் அணை திறக்கப்படாத நிலையில் போர்செட் மூலம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு கடுமையான ஒரு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. திருவையாறு தாலுக்கா முழுவதும் யூரியா தட்டுப்பாடு கடுமையாக உள்ளது.
அரசு கூட்டுறவு சங்கங்களில் பார்வை விட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உரங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் யூரியா 240 ரூபாய் விற்கப்பட்டது தற்பொழுது 340 விற்கிறது.
விவசாயிகள் கூடுதல் விலை கொடுத்து வாங்க தயாராக இருந்தாலும் யூரியா வாங்கினால் கூடுதலாக இடுபொருள் வாங்க சொல்லி கட்டாயப்படுத்துவதால் கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை மேட்டூர் அணை திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து இது பொருள், டீசல் விலை உயர்வால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
விவசாய கடனும் ரத்து செய்யாத நிலையில் விரைந்து இதற்கு தீர்வு காணப்பட வேண்டும் என கோரிக்கை.


