நாகை அக்கரைப்பேட்டையில் சுமார் 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை கடத்த முயன்றவர்களிடமிருந்து சுமார் 300 கிலோ கடல் அட்டைகளை நாகப்பட்டினம் கடலோர பாதுகாப்பு குழு போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாகப்பட்டினம் கடற்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அக்கரைப்பேட்டை மீன்பிடி இறங்குதளம் அருகே இந்திய அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை அதிக லாபத்திற்காக பதப்படுத்தி கடத்துவதற்காக பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நாகப்பட்டினம் கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சிவசங்கர் மற்றும் காவலர்கள், வனத்துறை அலுவலர்கள் இணைந்து சோதனை மேற்கொண்டனர்.

அப்போது தண்ணீரில் ஊறிய நிலையில் 12 நைலான் சாக்குகளில் இருந்த சுமார் 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் மேல் நடவடிக்கைக்காக நாகப்பட்டினம் வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.

