in

ஜர்னலிசத்தில் மனிதநேயம் இருகிறதா?… பொய்யான தகவல்களை பரப்பாதீர்கள்.. நிவேதா பெத்துராஜ்

ஜர்னலிசத்தில் மனிதநேயம் இருகிறதா?… பொய்யான தகவல்களை பரப்பாதீர்கள்.. நிவேதா பெத்துராஜ்

கடந்த சில நாட்களாக வலைதளங்களில் நிவேதா பெத்துராஜை பற்றி பல கிசுகிசுக்கள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது.

இதனை பார்த்து கோபம் அடைந்த நிவேதா பெத்துராஜ் அதற்கான விளக்கத்தை தனது x தலத்தில் பகிர்ந்துள்ளார்.

எனக்காக ஏகப்பட்ட பணங்கள் செலவு பண்ணி படம் எடுக்கப்படுவதாக பொய்யான தகவல்கள் வெளி வருகிறது. என்னைப் பற்றி பேசுபவர்கள் மனசாட்சியுடன் பேசுகிறார்களா என்று நினைத்து பார்க்க வேண்டும்.

ஒரு பெண்ணின் வாழ்க்கையை நாசம் செய்வதற்கு முன் அந்த தகவலை சரி பார்ப்பார்கள் என்று நினைத்துதான் நான் அமைதியாக இருந்தேன். கடந்த சில நாட்களாக நானும் என் குடும்பமும் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறோம் இதுபோன்ற தவறான செய்திகளை தயவுசெய்து பரப்பாதீர்கள் நான் கண்ணியமான குடும்பத்தில் இருந்து வந்தவள்.

என் 16 வயதில் இருந்தே நான் சம்பாதித்துக் கொண்டிருக்கிறேன். 20 ஆண்டுகளாக துபாயில் வசித்து வரும் நாங்கள் இன்னும் துபாயில் தான் வசித்து வருகிறோம். எந்த தயாரிப்பாளரிடமும், இயக்குனரிடமும் எனக்கு வாய்ப்பு கொடுக்குமாறு நான் கேட்டதில்லை.

இதுவரை நான் 20 படங்களில் நடித்திருக்கிறேன். அது எல்லாமே தானாக வந்த வாய்ப்பு தான் நான் என்றைக்கும் பணத்திற்கோ பதவிக்கோ பேராசை பட்டது கிடையாது. இனிமேலும் நான் அப்படித்தான் இருப்பேன் என்னை பற்றி வரும் பதிவுகள் எதுவும் உண்மை இல்லை என்பதை நான் உறுதியாக சொல்கின்றேன்.

2020 ஆம் ஆண்டில் நான் துபாயில் ஒரு வாடகை வீட்டில் தான் வசித்து வந்தேன் 2013 ஆம் ஆண்டு இருந்து ரேசிங் எனக்கு மிகவும் பிடித்த விஷயம். ஆனால் சென்னையில் ரேஸ் நடந்தது பற்றி எனக்கு எந்த ஒரு தகவலும் தெரியாது. நீங்கள் என்னைப் பற்றி இந்த அளவிற்கு கூறும் அளவிற்கு நான் ஒன்னும் பெரிய ஆள் கிடையாது நான் ரொம்ப சிம்பிளான வாழ்க்கை வாழ்கிறவர்.

வாழ்க்கையில் நிறைய போராட்டங்களுக்கு பிறகு தான் நான் இந்த இடத்தில் இருக்கிறேன். நான் தொடர்ந்து கண்ணியமான வாழ்க்கையை தான் வாழ விரும்புகிறேன். உங்கள் குடும்பத்தில் இருக்கும் பெண்கள் இதுபோன்றுதான் இருக்கிறார்களா?

இது சம்பந்தமாக நிச்சயம் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் ஏனென்றால் ஜர்னலிசத்தில் இன்னும் கொஞ்சம் மனிதநேயம் இருக்கிறது என்று நான் நம்புகிறேன் அதை பொய்யாக்காதீர்கள்.

அதனால் தொடர்ந்து என்னைப் பற்றி தவறான கருத்துக்களை இனிமேல் பேச மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன் ஒரு குடும்பத்தின் பெயரை கெடுப்பதற்கு முன் அந்த தகவல் உண்மையானதா என்று ஆராய்ந்து பிறகு வெளியிடுமாறு பத்திரிகையாளர்களை நான் கேட்டுக்கொள்கிறேன். எனக்காக சப்போர்ட் செய்து குரல் கொடுத்த அனைவருக்கும் எனது நன்றியையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஆவேசமாக கண்டித்த பதிலளித்துள்ளார்.

What do you think?

நான் ஏன் விஜய் டிவி யை விட்டு…. வெளியே வந்தேன்…… டிடி வருத்தம்

டைரக்டர் ஆவதற்கு அனுபவம் தேவை இல்லை … பணம் இருந்தால் போதும்…கூலாக பதில் சொன்ன டைரக்டர்