in

நான் ஏன் விஜய் டிவி யை விட்டு…. வெளியே வந்தேன்…… டிடி வருத்தம்

நான் ஏன் விஜய் டிவி யை விட்டு…. வெளியே வந்தேன்…… டிடி வருத்தம்

யாராலும் மறக்க முடியாத பிரபலமான தொகுப்பாளனி என்றால் அது விஜய் டிவி டிடி தான்.

பல வருடங்களுக்கு மேலாக விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய டிடிக்கு ரசிகர்கள் பட்டாலும் ஏராளம். அவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விதமே கலகலப்பாகவும் நகைச்சுவையாகவும் இருக்கும். அந்த அளவிற்கு தனது பணியை நேசித்து வேலை செய்பவர்.

ஆனால் கடந்த சில வருடங்களாக அவரால் எந்த நிகழ்ச்சியும் தொகுத்து வழங்க முடியவில்லை. தற்பொழுதுதான் ஒரு சில நிகழ்ச்சியில் தலை காட்டுகிறார். அதற்கு காரணம் அவரது உடல்நிலையில் ஏற்பட்ட காரணம் தான், அண்மையில் அவர் கொடுத்த ஒரு பேட்டியில் தனது உடல்நிலை பற்றி கூறியதாவது.

நான் டிடி வித் காபி என்ற நிகழ்ச்சியை நானே கேட்டு வாங்கியது எனக்கு ஒரு நிகழ்ச்சியை தாருங்கள் அதற்கு ஒரு வாரம் மட்டும் டைம் கொடுங்கள், என்னால் முடிந்த அளவிற்கு என்னுடைய பெஸ்ட்டை கொடுக்கிறேன். உங்களுக்கும் மக்களுக்கும் இந்த நிகழ்ச்சி பிடிக்கவில்லை என்றால் நிறுத்தி விடலாம் என்று கேட்டிருக்கிறார்.

ஆனால் அந்த நிகழ்ச்சி செம ஹிட் அதன் மூலம் தான் டிடியின் புகழ் பரவத் தொடங்கியது. இந்த அளவிற்கு புகழின் உச்சத்தில் இருந்த டிடி தன் உடல்நிலை காரணமாக அவர் விரும்பிய வேலையை பார்க்க முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டதாக மிகுந்த வருத்தத்துடன் கூறினார்.

நம் உடல்நிலை நன்றாக இருந்தால்தான் நம்முடைய வேலைகளை நன்றாக பார்க்க முடியும் நாம் ஆரோக்கியமாக இருந்தால் மட்டும்தான் அந்த இடத்தில் நம்மை வைத்து வேலை வாங்குவார்கள் நம்மால் முடியவில்லை என்றால் அங்கிருந்து நம்மை தூக்கி வீசி விடுவார்கள் என்பது என் வாழ்க்கையில் நான் லேட்டாக கற்றுக் கொண்ட விஷயம்.

நான் பல மணி நேரம் நின்று ஆங்கர் பண்ணியதால் என் காலில் வலி ஏற்பட்டது. அதற்காக ஒரு ஆப்ரேஷன் செய்தேன் ஆனால் வலி குறையாததால் மீண்டும் ஆப்ரேஷன் செய்த போது தவறாக ஆபரேஷன் செய்து விட்டார்கள். அதனால் என்னால் எழுந்து நிற்க கூட முடியாத சூழ்நிலைகள் நான் பல நாட்களை வலியில் மட்டும்தான் கடந்தேன் நான் எங்கு சென்றாலும் வீல்சேரில்தான் செல்கிறேன்.

இப்பொழுது வரை நான் அந்த வலியுடன் தான் வாழ்கையை கடந்து செல்கிறேன் அதனால் என்னால் அதிகமான நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள முடியவில்லை என்று வருத்ததுடன் பகிர்ந்து கொண்டார்.

What do you think?

சட்ட மன்றதுக்கு பூட்டு பஞ்சாப் முதல்வர் கிண்டல்

ஜர்னலிசத்தில் மனிதநேயம் இருகிறதா?… பொய்யான தகவல்களை பரப்பாதீர்கள்.. நிவேதா பெத்துராஜ்