in

குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு

குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு

 

மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 6 பேர் ஏற்கெனவே குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்ட நிலையில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் மேலும் 3 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.

மயிலாடுதுறை நகரில் மார்ச் 20-ஆம் தேதி இரவு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த அஜித்குமார் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற வன்னியர் சங்க முன்னாள் நகர செயலாளர் கண்ணன் கொலைக்கு பழிக்குப்பழியாக நடைபெற்றதாக கூறப்பட்டது.

அஜித்குமார் கொலை வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேரில் மில்கி (எ) சந்திரமோகன்(29), சதீஷ்(22), ஸ்ரீராம்(26), சந்திரமௌலி (24), மோகன்தாஸ்(28), பாலாஜி(29) ஆகிய 6 பேர் ஏற்கெனவே குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்,இதே கொலை வழக்கில் சிறையில் உள்ள சத்தியநாதன்(20), நாகராஜ்(27),சத்தியசீலன்(23) ஆகிய 3 பேர் மீதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.மீனா பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி குண்டர் தடுப்புச்சட்டத்தின்கீழ் அடைக்க உத்தரவிட்டார்.

அதன்பேரில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவு நகலை மயிலாடுதுறை போலீஸார் திருச்சி மத்திய சிறையில் இன்று ஒப்படைத்தனர்.

What do you think?

OTT..யில் வெளியாகும் கவினின்… ஸ்டார்

டாப் ஹீரோ…வின் உறவினரை திருமணம் செய்ய போகும் லேகா வாஷிங்டன்