in

சோதனை சாவடியில் கண்காணிப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு


Watch – YouTube Click

சோதனை சாவடியில் கண்காணிப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலியாக தென்காசி மாவட்டம் தமிழக – கேரள எல்லை பகுதியான புளியரை சோதனை சாவடியில் கண்காணிப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவல் இருப்பதால் அந்த காய்ச்சல் தமிழகத்துக்குள் பரவுவதை தடுக்க தமிழக-கேரள எல்லையில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அந்த வகையில் தென்காசி மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதியான புளியரை சோதனை சாவடியில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் லாரிகள் உள்ளிட்ட வாகனங்களில் சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கின்றனர்.
அதுபோன்று கேரளாவில் இருந்து பொருட்கள் ஏற்றி வந்தால் அவை என்ன பொருட்கள் என்று வாகனம் முழுவதுமாக சோதனை செய்யப்படுகிறது. மேலும் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு கோழிகள், வாத்துகள் முட்டைகள், கோழி தீவனங்கள், கோழி கழிவுகள் உள்ளிட்டவை கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்த கண்காணிப்பு பணியை மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேரடியாக சென்று பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் தமிழகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களிலும் கிருமி நாசினிகள் தெளிக்கும் பணியில் கால்நடை துறை பணியாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து இப்பணிகள் 24 மணி நேரமும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இது குறித்தும் மாவட்ட ஆட்சியர் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டார்.


Watch – YouTube Click

What do you think?

வத்திராயிருப்பு அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாம்

வெண்பட்டுடுத்தி ஆற்றில் இறங்கிய நாட்டரசன் கோட்டை வெங்கடாஜலபதி பெருமாள்