in

தென்காசி அருகே மாம்பழ குடோனில் உணவு பாதுகாப்புத் துறையினர் அதிரடி சோதனை


Watch – YouTube Click

தென்காசி அருகே மாம்பழ குடோனில் உணவு பாதுகாப்புத் துறையினர் அதிரடி சோதனை

செயற்கை முறையில் ரசாயனம் தெளித்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் கைப்பற்றி அழிப்பு

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோடை காலத்தில் அதிகமாக விளையும் மாங்காய் விளைச்சலும் தற்பொழுது தென்காசி மாவட்டத்தில் அதிகமாக விளைச்சல் உள்ளது. இந்த நிலையில் தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான மாங்காய் குடோன்கள் செயல்பட்டு வருகின்றன.

அந்த வகையில் வல்லம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் மாங்காய் குடோன்களில் இருந்து கேரள மாநிலத்திற்கு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு மாங்காய் ஏற்றுமதியில் செயல்பட்டு வரும் நிலையில் மாங்காயை செயற்கையாக பழுக்க வைப்பதற்காக செயற்கையாக ரசாயன கலவை கலந்த மருந்துகளை தெளித்து மாங்காய்கள் அனுப்பப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு தென்காசி மாவட்ட உணவு வட்டார பாதுகாப்பு அலுவலர் நாகசுப்பிரமணியன் தலைமையில் திடீர் ஆய்வு வல்லம் பகுதியில் நடைபெற்றது. அதில் ஒரு குடோனில் ரசாயன மருந்து தெளித்து பதுக்கி வைக்கப்பட்ட சுமார் ஒரு டன் மாங்காய் இருப்பது கண்டறியப்பட்டது.

இதனை தொடர்ந்து இன்று அவர் காலையில் அந்த மாங்காய் குடோனில் சோதனைகள் நடத்ததியதில், ரசாயன ஸ்பிரே தெளிக்கப்பட்ட மாங்காய்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவற்றை காசிமேஜர் புரம் பகுதியில் உள்ள ஊராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கிற்கு கொண்டு சென்று பினாயில் ஊற்றி அளிக்கும் பணியில் ஈடுபட்டார்.

செயற்கை ஸ்பிரே அடிப்பதன் வாயிலாக மாங்காய் உட்கொள்ளும் நபர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் எனவே பயன்படுத்தக் கூடாது என விற்பனையாளர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டது.


Watch – YouTube Click

What do you think?

பராமரிப்பு பணி காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் ரோப் சேவை நிறுத்தம்

மயிலாடுதுறையில் சிலம்பம் கச்சை கட்டும் விழா