in

திடீர் ரைடில் ஈடுபட்ட அதிரடி காட்டும் எஸ் பி….

திடீர் ரைடில் ஈடுபட்ட அதிரடி காட்டும் எஸ் பி….

 

எஸ் பி தலைமையில் 75க்கும் மேற்பட்ட போலீசார் திருவண்ணாமலை மாநகரில் நள்ளிரவில் வலம் வந்ததால் பரபரப்பு….‌‌

விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த மைனர் ஹீரோக்களை எச்சரித்து அனுப்பிய போலீசார்……

திருவண்ணாமலை கிரிவலப் பாதை அருகில் உள்ள ஏரியில் கிரிவலம் வந்து மீண்டும் வீட்டிற்கு செல்லும்போது பெண்களிடம் நகைகளை பறித்து பாலியல் தொந்தரவு கொடுத்து அரை நிர்வாணம் வீடியோ எடுத்த சம்பவத்தில் 11 பேர் குற்றத்தில் தொடர்புடையவர்கள் என கூறி ஒன்பது பேரை கைது செய்து இரண்டு பேரை தேடி வரும் நிலையில் தற்போது இந்த சம்பவம் தமிழகத்தை பரபரப்பாகியுள்ளது.

இந்நிலையில் எஸ் பி தலைமையில் சுமார் 70-க்கும் மேற்பட்ட போலீசார் நள்ளிரவு திருவண்ணாமலை மாநகரம் முழுவதும் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

சாலையில் மைனர் ஹீரோக்கள் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் சுற்றி தெரிந்தவர்களை எச்சரித்து அனுப்பினார் இந்த சம்பவத்தால் நேற்று இரவு திருவண்ணாமலையில் பரபரப்பு ஏற்பட்டது.

What do you think?

காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோவிலின் வைகாசி பிரம்மோற்சவ விழா தேரோட்டம்

கோடை விடுமுறைக்கு பின் புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு..