in

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி SFI தீப்பந்தம் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி SFI தீப்பந்தம் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

டெல்லியில் போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவாகவும், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தியும், புதுச்சேரியில் இந்திய மாணவர் சங்கம் (SFI) சார்பில் ராஜா திரையரங்கம் அருகே பிரம்மாண்ட தீப்பந்தம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சமீபகாலமாக கல்வித்துறையில் நிலவி வரும் குளறுபடிகள், தேசிய தேர்வு முகமையின் (NTA) தோல்விகள் மற்றும் மாணவர்களுக்கு எதிரான போக்கு ஆகியவற்றைக் கண்டித்து டெல்லியில் மாணவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி ராஜா தியேட்டர் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், SFI அமைப்பைச் சேர்ந்த ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். டெல்லி மாணவர்களின் போராட்டத்திற்கு தார்மீக ஆதரவை வழங்கும் வகையில், கைகளில் தீப்பந்தங்களை ஏந்தி, ஒன்றிய அரசுக்கும் கல்வி அமைச்சருக்கும் எதிராக அவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும். என கோஷங்களை எழுப்பினர்

What do you think?

மலேசியாவில் உயிரிழந்த ஆண்டிபட்டி இளைஞர்; மரணத்தில் மர்மம் என உறவினர்கள் குற்றச்சாட்டு

மரக்காணம் அருகே கந்தாடு புதிய தெரு கிராமத்தில் செல்லியம்மன் கோயில் பால் அபிஷேக விழா