மரக்காணம் அருகே கந்தாடு புதிய தெரு கிராமத்தில் செல்லியம்மன் கோயில் பால் அபிஷேக விழா
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கந்தாடு புதிய தெரு கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற செல்லியம்மன் கோயில். இந்த கோயிலுக்கு ஆண்டுதோறும் ஆடி மாத முதல் செவ்வாய்க்கிழமை பால் அபிஷேகம் மற்றும் பால்ஸ் சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடைபெறும்.
இந்நிலையில் இன்று இக்கோயிலுக்கு பால் அபிஷேக விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், யாகங்கள் நடைபெற்றது. நிகழ்ச்சியை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள செங்கேணி அம்மன் கோயிலில் இருந்து 200 க்கும் மேற்பட்ட பெண்கள் பால் குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்து செல்லியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர்.

