in

2024 க்கு பிறகு ஆயுள் கைதியாக தான் பிரதமர் மோடி இருப்பார்


Watch – YouTube Click

2024 க்கு பிறகு ஆயுள் கைதியாக தான் பிரதமர் மோடி இருப்பார்

 

புதுச்சேரியில் திமுக சார்பில் பொதுக்கூட்டம் கருவடிக்குப்பத்தில் மாநில அமைப்பாளர் சிவா தலைமையில் நடந்தது. இதில் கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி சிறப்புரையாற்றினார்..

அப்போது அவர் அமைச்சர் உதயநிதி பேசியதில் தவறில்லை. சனாதானத்தை பற்றி நாங்கள் கூறியதை திரும்ப பெற மாட்டோம்.அது பற்றி பேசவேண்டாம் என காங்கிரசார் கூறுகின்றனர். கூட்டணியில் தான் இருக்கிறோம் .. காங்கிரசை காப்பாற்ற போவது நாம் தான்.. சனாதானத்தை பேச வேண்டாம் என்று கூறிய கமல்நாத் இன்று பாஜகவுக்கு சென்று இருக்கிறார் என்றார்.

பீச்சில் சோன்பப்படி விற்பதற்கு தான் தமிழக ஆளுநர் லாய்க்கு …
EDயை காட்டி ஆளுநர் மிரட்டுகிறார்.. பாஜக ஆளாத மாநிலங்களில் பாஜக ஆளுநர்கள் பணம் படைத்தவர்களை, கள்ள மார்க்கெட்டில் கொள்ளை அடித்தவர்களை வருமான வரி துறை மூலம் பட்டியல் தயாரித்து இன்கம்டாக்ஸ் நோட்டீஸ் வழங்கி ராஜ் பவனில் அழைத்து ஆளுநர் வசூல் செய்கிறார்.. கட்சிக்கு நிதி கொடுக்காவிட்டால் நாளை ED ரெய்டு என ஆளுநர் ரவி மிரட்டுகிறார்.

புதுச்சேரியில் மிரட்டபட்டவர்கள் பற்றிய மே மாதத்திற்கு பிறகு திமுக அமைப்பாளர் சிவா வெளியிடுவார் என பாரதி தெரிவித்தார்.

ரவுடி, கொலை செய்தவர்களா எங்கும் தேட வேண்டாம்… எல்லாம் பாஜக அலுவலகத்தில் இருக்கிறார்கள் என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் திமுக கூட்டணி இருக்க வேண்டும் கலைஞர் நினைத்தார்…

ஆனால் சண்டாளர்கள் நம்மோடு அவரை வரவிடவில்லை.. ஓட்டு பிரிந்தது.. அதன் விளைவு திமுக தோற்றது.அன்றைய தேர்தல் திமுக ஜெயித்திருந்தால் தலைவர் இன்னும் உயிரோடு இருந்திருப்பார்.. கலைஞர் மட்டுமல்ல ஜெயலலிதா உயிரோடு இருந்திருப்பார்கள் .. விஜயகாந்த் இறந்திருக்க மாட்டார் என R.S. பாரதி தெரிவித்தார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது ஒன்றே முக்கால் கோடிக்கு இட்லி சாப்பிட்ட ஒரே இயக்கம் அதிமுக தான் எனவும் பாரதி விமர்சித்தார்.

பிரதமர் மோடி அரசில் 7.5லட்சம் கோடி கையாடல் செய்ததாக மத்திய தணிக்கை குழு குற்றம்சாட்டியுள்ளது. திமுக 1லட்சம் கோடி ஊழல் செய்ததாக கூறியதற்கு ஒன்றே முக்கால் வருடம் சிறையில் இருந்தோம்..

தோலை திண்றவனுக்கு ஒன்றே முக்கால் வருடம் சிறையில் என்றால் 2024 க்கு பிறகு ஆயுள் கைதியாக தான் பிரதமர் மோடி இருப்பார் என தெனாலிராமன் கதையுடன் ஒப்பிட்டு பாரதி கூறினார்..


Watch – YouTube Click

What do you think?

மாநில அளவிலான ஆண்கள் பெண்கள் கைப்பந்து போட்டியின் பரிசு வழங்கும் விழா

பைக்குகள் திருடிய இருவரை சினிமா பாணியில் 4 கி மீ தூரம் விரட்டி சென்று கைது செய்த போலீசார்