in

தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஆனந்த் பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரி முழுவதும் தவெக-வினர் கட்டவுட் பேனர்கள் வைத்து கோலாகலமாக கொண்டாடினர்.

தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஆனந்த் பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரி முழுவதும் தவெக-வினர் கட்டவுட் பேனர்கள் வைத்து கோலாகலமாக கொண்டாடினர்.

தமிழக ஊரக வளர்ச்சி துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சரும், தவெக பொதுச் செயலாளருமான புஸ்சி ஆனந்த் தனது பிறந்த நாளை இன்று புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் கொண்டாடினார்.

இதனை ஒட்டி புதுச்சேரி முழுவதும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தவெக நிர்வாகிகள், அமைச்சர் ஆனந்திற்கு வாழ்த்து தெரிவித்து மாநிலம் முழுவதும் பேனர்களையும் கட்டவுட் களையும் வைத்திருந்தனர்.

நேற்று இரவு முதலே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து புதுச்சேரியில் குவிந்திருந்த தவெகவினர் இன்று காலை அவரது இல்லத்திற்கு சென்று பூங்கொத்துகள் கொடுத்தும் மற்றும் பரிசு பொருட்களை வழங்கியும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

 

தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த தவெக-வினர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க ஒரு சேர கூடியதால் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது இதனால் அமைச்சர் ஆனந்தின் வீட்டை சுற்றி தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புகள் போடப்பட்டிருந்தது.

கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டதால் தவெக தொண்டர்கள், சிறிது சிறிதாக அனுப்பி வைக்கப்பட்டு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து அமைச்சர் ஆனந்தின் குலதெய்வமான சின்ன சுப்பரப்புள்ள வீதியில் அமைந்துள்ள அருள்மிகு அங்காளம்மன் கோவிலில் நெய் விளக்கு ஏற்றி அமைச்சர் ஆனந்த் சாமி தரிசனம் செய்தார்.

கோவிலில் ஒன்று கூடி இருந்த தொண்டர்கள் முண்டியடித்துக் கொண்டு பரிசு பொருட்களை வழங்கி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்ததால் கோவிலில் கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தொடர்ந்து காலை முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தவெக தொண்டர்கள் புதுச்சேரியில் குவிந்து அமைச்சர் ஆனந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க குவிந்ததால் புதுச்சேரியே கோலாகலமாக காட்சியளித்தது மேலும் பல்வேறு இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

What do you think?

‘ஜனநாயகன் ‘ – மக்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டம் – அமைச்சர் ஸ்ரீநாத் பேட்டி.!

மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி