in

மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி

மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி

 

தூத்துக்குடியில் சி.எம்.என். ஷட்டில் கிளப் சார்பில் மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி: மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட சி.எம்.என். ஷட்டில் கிளப் (CMN Shuttle Club) சார்பில், மாவட்ட அளவிலான சிறுவர்களுக்கான மற்றும் 8 மாவட்டங்களைச் சேர்ந்த ஆண்களுக்கான இறகுப்பந்து போட்டி, தூத்துக்குடி டி.சி.பி.சி. மேற்கு மண்டலம், அசோக் நகர் 2-வது தெருவில் நடைபெற்றது.

சி.எம்.என். ஷட்டில் கிளப்பின் தலைவரும், 34-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான சந்திரபோஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

போட்டியைத் தொடங்கி வைத்த பின்னர், மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்: விளையாட்டு என்பது உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல் ஒழுக்கம், ஒற்றுமை, தன்னம்பிக்கை மற்றும் தலைமைத்துவத் திறனையும் வளர்க்கும் முக்கியமான துறையாகும் தொடர்ந்து பயிற்சி மற்றும் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் மாவட்ட, மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று பல்வேறு சாதனைகளைப் படைக்க முடியும் என்றும், மாணவர்கள் விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டி உயரிய இலக்குகளை அடைய வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்தப் போட்டித் தொடரில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, மதுரை, விருதுநகர், தேனி மற்றும் சிவகங்கை ஆகிய 8 மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்கள் உற்சாகமாக பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

தொடர்ந்து, மேயர் ஜெகன் பெரியசாமி சி.எம்.என். ஷட்டில் கிளப் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பசுமைத் தோட்டத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, வளாகம் முழுவதும் ஏராளமான காய்கறி மரங்கள் நன்கு பராமரிக்கப்பட்டு பசுமையாக காணப்பட்டதை பாராட்டிய அவர், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பசுமையை பேணிவரும் கிளப்பின் தலைவரும், 34-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான சந்திரபோஸின் முயற்சியை வெகுவாக பாராட்டினார்.

இந்நிகழ்வை செயலாளர் வி. ரமேஷ் கார்த்திகேயன் மற்றும் சி.எம்.என். ஷட்டில் கிளப் நிர்வாகிகள் ஒருங்கிணைத்தனர். மேலும், பொதுமக்கள், விளையாட்டு ஆர்வலர்கள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் கலந்து கொண்டு போட்டியை உற்சாகப்படுத்தினர்.

What do you think?

தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஆனந்த் பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரி முழுவதும் தவெக-வினர் கட்டவுட் பேனர்கள் வைத்து கோலாகலமாக கொண்டாடினர்.

தூத்துக்குடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய காங்கிரஸ்