in

‘ஜனநாயகன் ‘ – மக்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டம் – அமைச்சர் ஸ்ரீநாத் பேட்டி.!

‘ஜனநாயகன் ‘ – மக்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டம் – அமைச்சர் ஸ்ரீநாத் பேட்டி.!

 

அனைத்து தடைகளையும் தாண்டி வெளியான ‘ஜனநாயகன் ‘ – மக்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டம், மிகப்பெரிய வெற்றியைப் பெறும் – அமைச்சர் ஸ்ரீநாத் பேட்டி.!

தூத்துக்குடியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டு திருவிழா, வரும் ஜூலை 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது.

இத்திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷ மகாஜன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் காவல்துறை, மாநகராட்சி, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “திருவிழாவிற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். குறிப்பாக சுமார் 25 ஆயிரம் பேர் ஒரே இடத்தில் கூடும் சூழல் இருக்கும்.

10 நாட்கள் நடைபெறும் திருவிழா என்பதால், காவல்துறை, தீயணைப்புத் துறை, மருத்துவம், பாதுகாப்பு, போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஜனநாயகன் திரைப்படம் 23-ஆம் தேதி வெளியாகவுள்ளது. முதல்வர் விஜய் மற்றும் நீங்கள் இருவரும் நடித்த இறுதி படம் இதை எப்படி பார்க்கிறீர்கள்?” என்று கேள்விக்கு? அனைத்து தடைகளையும் தாண்டி இந்த படம் வெளியாகியுள்ளது என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

மக்கள் எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ, அதேபோல் மாண்புமிகு முதலமைச்சரும் நானும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். இந்த படம் மக்களுக்கு ஒரு பெரிய கொண்டாட்டமாக இருக்கும். உண்மையில் இது மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்றார்.

What do you think?

ஏர் ஹாரன்கள் பறிமுதல்… அதிரடி நடவடிக்கை!

தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஆனந்த் பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரி முழுவதும் தவெக-வினர் கட்டவுட் பேனர்கள் வைத்து கோலாகலமாக கொண்டாடினர்.