in

கொடைக்கானலில் தீராத மஞ்சமல்பாய்ஸ் மோகம்


Watch – YouTube Click

கொடைக்கானலில் தீராத மஞ்சமல்பாய்ஸ் மோகம்

 

தீராத மஞ்சமல்பாய்ஸ் மோகம் கொடைக்கானலில் உள்ள குணா குகையில் கடந்த நான்கு நாட்களில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கண்டு களித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உலகளாவிய சுற்றுலா தளமாகும் ஆண்டுதோறும் பல லட்சம் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருவது வழக்கம் …

மேலும் கடந்த சனி மற்றும் ஞாயிறு தினங்களில் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்து இருந்த நிலையில் தற்போது சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து உள்ளது…

இருந்தாலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மலையாள மொழியில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்க கூடிய மஞ்சமல் பாய்ஸ் என்ற திரைப்படம் குணா குகையை மையமாக வைத்து எடுத்த படமாகும் குகையில் விழுந்த தன்னுடைய நண்பனை காப்பாற்றக்கூடிய காட்சிகளை சிறந்து காண்பித்து இருக்கக்கூடிய இப்படத்தாள் குணா குகை மீண்டும் பிரபலமாக துவங்கி இருக்கிறது …

மேலும் வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய முக்கிய சுற்றுலா தலங்கள் ஆன மோயர் சதுக்கம், பைன் மரக்காடுக் , தூண் பாறை, குணா குகை, பேரிஜம் உள்ளிட்ட பல சுற்றுலாத்தலங்கள் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது… 12 மைல் தொலைவில் இருக்கக்கூடிய இந்த சுற்றுலாத்தலங்களுக்கு வரும்பொழுது முதல் சுற்றுலா தளமாக இருப்பது தான் மோயர் சதுக்கம் எப்பொழுதுமே மோயர் சதுக்கத்தில் தான் அதிக சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை காணப்படும்…

ஆனால் மஜ்சுமல் பாய்ஸ் திரைப்படம் வெளியானது முதல் மோயர் சதுக்கத்திற்கு அடுத்து உள்ள குணா குகையில் தான் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இருந்துள்ளது… வனத்துறை அளித்துள்ள தகவலின் படி கடந்த நான்கு நாட்களில் மட்டும் குணா குகையில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றுள்ளனர்… என்றும் முதல் சுற்றுலாத்தலமாக இருக்கக்கூடிய மோயர் சதுக்கத்திற்கு 17,000 சுற்றுலாப் பயணிகள் மட்டுமே வந்திருக்கின்றனர்… கிட்டத்தட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் அதிகமாக குணா குகை கண்டு களித்துள்ளனர்… இனிவரும் நாட்களிலும் குணா குகைக்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது…


Watch – YouTube Click

What do you think?

சிறுமி கொலையை கண்டித்து கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

அடிப்படை தேவைகளை நிறைவேற்ற கோரி வீடுகளில் கருப்பு கொடி