in

தூத்துக்குடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய காங்கிரஸ்

தூத்துக்குடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய காங்கிரஸ்

 

பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாள்: தூத்துக்குடியில் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய காங்கிரஸ்

பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வட்டக்கோவில் மெயின் பகுதியில் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

மாநகர மாவட்ட பொதுச் செயலாளர் மைக்கில் பிரபாகர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், 500 பயனாளிகளுக்கு சேலைகள் மற்றும் மாணவர்களுக்கான நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.எம். சகாயராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.பி. சுடலையாண்டி ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

மேலும், சிறுபான்மை மாவட்டத் தலைவர் மைதீன், 4-வது வார்டு தலைவர் ராஜரத்தினம், 10-வது வார்டு தலைவர் சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை மாநகர மாவட்ட பொதுச் செயலாளர் மைக்கில் பிரபாகர் மற்றும் வார்டு நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

நிகழ்ச்சியில் மாநகர காங்கிரஸ் நிர்வாகிகள் வார்டு செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

What do you think?

மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி

பரமத்தி வேலூர் சனீஸ்வர பகவான் அபிஷேக ஆராதனை