in

ஏர் ஹாரன்கள் பறிமுதல்… அதிரடி நடவடிக்கை!

ஏர் ஹாரன்கள் பறிமுதல்… அதிரடி நடவடிக்கை!

 

மோட்டார் வாகன சட்ட விதிகளுக்கு புறம்பாக மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பொருத்தி இருந்த ஏர ஹாரனை கழட்ட வைத்த போக்குவரத்து காவல் துறையினர் டயர் கீழ் வைத்து பேருந்தை ஏற்றி நசுக்கி அழித்தனர்.

தஞ்சை காவல்துறையினருக்கு பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் இருந்து தொடர்ந்து வந்த புகாரை அடுத்து தஞ்சை போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையில் போக்குவரத்து காவலர்கள் புதுக்கோட்டை சாலையில் ரோகினி மருத்துவமனை முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அரசுப்பேருந்து தனியார் பேருந்து மற்றும் மினி பேருந்துகளை நிறுத்தி ஹாரன் ஒலிக்க செய்து ஆய்வு மேற்கொண்டனர்.

 

மோட்டார் வாகன சட்ட விதிகளுக்கு புறம்பாக பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் பொருத்தி இருந்த ஏர்ஹாரனை ஓட்டுனரை விட்டு கழட்ட வைத்து டயர் அடியில் வைத்து பேருந்தை ஏற்றி நசுக்கி அழித்தனர்.

மேலும் சீருடை அணியாத ஓட்டுனர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்தனர்.

ஆய்வு செய்யப்பட்ட பேருந்துகளில் மீண்டும் ஏர்ஹாரன் பொருத்தி இருப்பது கண்டறியப்பட்டால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

What do you think?

தஞ்சாவூர் பெரியகோயில் மஹாவாராஹி அம்மன்  தேங்காய்ப்பூ அலங்காரம்

‘ஜனநாயகன் ‘ – மக்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டம் – அமைச்சர் ஸ்ரீநாத் பேட்டி.!