in

9 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட ஓசூர் அம்மன் கோயில்… சாமி தரிசனம் செய்து மகிழ்ந்த கிராம மக்கள்

9 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட ஓசூர் அம்மன் கோயில்… சாமி தரிசனம் செய்து மகிழ்ந்த கிராம மக்கள்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள அருகாவூர் கிராமத்தில், சமூகப் பிரச்சினை காரணமாக கடந்த 9 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த நூற்றாண்டு பழமையான ஓசூர் அம்மன் கோயில், இரு தரப்பினரின் சமரச ஒப்புதலையும் தொடர்ந்து மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

2018-ஆம் ஆண்டு வரை இரு சமூக மக்களும் ஒன்றிணைந்து வழிபட்டு வந்த நிலையில், திருவிழா நடத்துவது தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் கோயிலுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

 

 

இதனால், தங்களது குலதெய்வமான ஓசூர் அம்மனை வழிபட முடியாமல் அருகாவூர் கிராம மக்கள் பல ஆண்டுகளாக வேதனையில் இருந்து வந்தனர். கோயிலை மீண்டும் திறக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இரு தரப்பினரின் சமரச ஒப்புதலையும் பெற அதிகாரிகள் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்று ஒற்றுமையுடன் கோவில் திறக்கப்பட்டு வழிபட வேண்டும் என முடிவு ஏற்கப்பட்டது.

இதையடுத்து, கோவிலின் முன்பு செஞ்சி வட்டாட்சியர் ஏழுமலை தலைமையில், செஞ்சி காவல் ஆய்வாளர் விநாயகமுருகன் முன்னிலையில் இரு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில், இரு தரப்பினரும் முழு சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து, கோயிலின் சீல் அகற்றப்பட்டு கதவுகள் திறக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, கிராம மக்கள் சிறப்பு பூஜைகள் நடத்தி, 9 ஆண்டுகளுக்குப் பிறகு மகிழ்ச்சியுடன் அம்மனை தரிசனம் செய்தனர். மேலும், கோயில் வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணிகளிலும் ஆர்வமுடன் ஈடுபட்டு, வரவிருக்கும் திருவிழாவுக்கான ஏற்பாடுகளையும் தொடங்கியுள்ளனர்.

ஆடி மாதத்தில் அனைத்து தரப்பினருக்கும் மீண்டும் வழிபாடு செய்ய அனுமதி வழங்கப்பட்டிருப்பது அருகாவூர் கிராம மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

What do you think?

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் நடைபெறும் யாகசாலை பூஜைகளால் பாதிக்கப்படும் கல்வெட்டுகள் இயற்கை ஓவியங்கள்.

தவெக அரசு தேர்தல் வாக்குறுதான் விவசாய கடன்களை முழுவதுமாக ரத்து செய்ய வலியுறுத்தி