உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் நடைபெறும் யாகசாலை பூஜைகளால் பாதிக்கப்படும் கல்வெட்டுகள் இயற்கை ஓவியங்கள்.
உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவில் 1000 ஆண்டுகள் பழமையானது. மாமன்னன் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலயம் உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. தமிழர்களின் கட்டிடக்கலைக்கும் சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது.
கோவில் சுற்றுச்சுவர் முழுவதும் இயற்கை சாறுகளால் உருவாக்கப்பட்ட வண்ண ஓவியங்கள் – கோவிலில் கட்டுமானம் மற்றும் கட்டுமானத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள், கோவிலுக்கு வழங்கப்பட கொடைகள் குறித்து கல்வெட்டுகளாக பொறிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கோவிலின் இடதுபுறம் வராகி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆசாட நவராத்திரி விழா 10 நாட்கள் நடைபெறும். இதே போல் இந்த விழா கடந்த 13ஆம் தேதி தொடங்கியது. விழாவை முன்னிட்டு வராகி அம்மனுக்கு தினமும் பல்வேறு வகையான அலங்காரங்கள் நடைபெற்று வருகிறது.
மேலும் வராகி சன்னதி அருகே சிறப்பு யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. யாகசாலை பூஜைகளால் எழும் புகை அருகில் உள்ள ஓவியங்கள் மற்றும் கல்வெட்டுகளில் கரும்புகை படிந்து வருகிறது.
இதனால் ஓவியங்கள் அழியும் நிலையும் – கல்வெட்டுகள் சேதம் அடையும் நிலையம் உள்ளது. மேலும் அபிஷேகம் தண்ணீர் வெளியேற முடியாமல் அங்கு தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் வீசக்கூடிய நிலை உருவாகியுள்ளது. எனவே ஆயிரம் ஆண்டுகள் பொக்கிஷமான ஓவியங்கள் கல்வெட்டுகளை பாதுகாக்கும் வகையில் யாகசாலைகளை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


