ஆபரேஷன் சிந்தூர் நினைவு ஸ்தூபி: கும்பகோணத்தில் பணி துவக்கம்
பஹல்காம் தாக்குதலுக்கு நீதி வழங்கும் வகையில் இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சித்தூர் நினைவாக கும்பகோணம் அருகே புளியஞ்சேரி என்ற இடத்தில் 8 அடி உயரத்தில் சுமார் 600 கிலோ எடையில் மூன்றடி சுற்றளவிற்கு தயாராகும் ஐம்பொன் ஸ்தூபிக்கு, உலோகம் உருக்கும் பணி இன்று துவங்கியது.
இந்த நிகழ்வில் இந்திய ராணுவத்தின் முன்னாள் லெப்டினன்ட் ஜெனரல் அருண் பங்கேற்பு.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி பஹல்காம் என்ற இடத்தில் இந்திய சுற்றுலாப் பயணிகள் 26 நபர்களை பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர் .
இதற்கு பதில் சொல்லும் வகையில் கடந்த ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதிகளில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது .
இந்த தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்துர் என பெயரிடப்பட்டது.

ஆபரேஷன் சிந்துர் நினைவாக கும்பகோணம் அருகே புளியஞ்சேரி என்ற இடத்தில் ஐம்பொன்னால் ஆன நினைவு ஸ்தூபி தயாரிக்கப்படுகிறது. அதன் உலோகங்களை உருக்கும் பணி இன்று துவங்கியது.
இந்த நிகழ்வில் இந்திய ராணுவத்தின் முன்னாள் லெஃப்ட்டிநண்ட் ஜென்ரல் அருண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .
மூன்றடி சுற்றளவில், எட்டடி உயரத்திற்கும் 600 கிலோ எடையில் ஐம்பொன்னால் சிந்துர் நினைவு ஸ்தூபி தயாராகிறது. சிந்துர் நினைவு ஸ்தூபி கும்பகோணத்தில் இருந்து புது டெல்லிக்கு எட்டு மாநிலங்கள் வழியாக கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது .
புதுடில்லியில் பெரிய அளவில் இந்த ஸ்தூபிக்கு வரவேற்பு தரவும் திட்டமிடப்பட்டுள்ளது என இந்திய ராணுவத்தின் முன்னாள் லெப்டினன்ட் ஜெனரல் அருண் தெரிவித்தார் .


