in

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் தெப்பத் திருவிழா

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் தெப்பத் திருவிழா

வைகாசி விசாகப் பெருவிழாவின் சிகர விழாவான தெப்ப உற்சவத்தில் திருவாவடுதுறை ஆதீனம் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழாவின் சிகர விழாவான தெப்ப உற்சவம் வெகு கோலகலமாக நடைபெற்றது. திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான இக்கோயிலில் வைகாசி விசாக பெருவிழா மே 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து, தினசரி பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும்,மே 25-ஆம் தேதி சகோபுர தரிசனம்,மே 27-ஆம் தேதி திருக்கல்யாணம், மே 29-ஆம் தேதி திருத்தேரோட்டம்,மே 30-ஆம் தேதி வைகாசி விசாக பௌர்ணமி தீர்த்தவாரி ஆகிய உற்சவங்கள் நடைபெற்றது.

விழாவின் சிகர உற்சவமான தெப்ப திருவிழா நேற்று இரவு கோயில் திருக்குளமான பிரம்மதீர்த்தத்தில் நடைபெற்றது.விழாவையொட்டி, மாயூரநாதர் சுவாமி,அபயாம்பிகை அம்மன் மற்றும் திருஞானசம்பந்தர் உற்சவ மூர்த்திகள், மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டனர்.

தொடர்ந்து,திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, சோடஷ தீபாராதனை நடைபெற்றது. பின்னர், மகா தீபாராதனை காட்டப்பட்டு, கோயில் குளத்தை 5 முறை தெப்பம் வலம் வந்தது. சிவபுரம் வேதசிவாகம பாடசாலை நிறுவனர்.

சுவாமிநாத சிவாச்சாரியர் பூஜைகளை செய்து வைத்தார். இதில், கோயில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

What do you think?

600 ஆண்டுகள் பழமையான தஞ்சாவூர் முத்து பல்லாக்கு திருவிழா

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு பிறந்த வீட்டில் உள்ள திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து