in

எழுச்சி மாநாட்டிற்கு 100 வாகனங்களில் செல்ல தீர்மானம்

எழுச்சி மாநாட்டிற்கு 100 வாகனங்களில் செல்ல தீர்மானம்

கும்பகோணத்தில் விசிக மாவட்ட செயற்குழு கூட்டம்  எழுச்சி மாநாட்டிற்கு 100 வாகனங்களில் செல்ல தீர்மானம்

கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் எஸ்.ஆர் திருமண மண்டபத்தில் மாவட்ட செயலாளர் ராஜசேகர் என்கிற அரசமுதல்வன் தலைமை நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் மாடாக்குடி செந்தில், மாவட்ட செய்தி தொடர்பாளர் சாத்தங்குடி சக்திவேல், மாவட்ட துணை செயலாளர்கள் கரிகாலன், வீரமுத்து, தலித் இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மாத்தி காளிதாஸ், தமிழ்மணி, மகளிர் விடுதலை மாவட்ட செயலாளர் கிறிஸ்டினா, இளைஞர் எழுச்சி பாசறை மாவட்ட செயலாளர் நாகப்பன், ஒன்றிய செயலாளர்கள் கருப்பூர் மோகன், திருப்புறம்பியம் மோகன், ராகா விக்கி, கொற்கை பழனி, திருநாகேஸ்வரம் நகர செயலாளர் வினோத் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

           

சிறப்பு அழைப்பாளர்களாக மாநில தேர்தல் பணிக்குழு துணை செயலாளர் தமிழன், மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் வழக்கறிஞர் விவேகானந்தன், கட்சியின் துணை பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ரஜினிகாந்த் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: வருகிற 17 ஆம் தேதி தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டிற்கு கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் திரளாக பங்கேற்பது.மாநாட்டிற்கு ₹3 லட்சம் நிதி திரட்டி வழங்குவது. இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் நிதி வழங்கியவர்கள்:
கருப்பூர் மோகன் – ₹25,000, ராகா விக்கி – ₹10,000, கொற்கை பழனி – ₹10,000, வினோத் – ₹7,000. தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட துணை அமைப்பாளர் டிஜிட்டல் ஐயப்பன் தனிநபர் நிதி வழங்கினார். நிறைவாக திருப்புறம்பியம் பிரவீன் நன்றியுரை ஆற்றினார்.

What do you think?

தெய்வானை சமேத அருள்மிகு அருள் முருகன் திருக்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன

ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பரமக்குடி ஆர்டிஓ (RDO) கைது