in

ஆடி அமாவாசை  தில்லை காளிக்கு சிறப்பு ஊஞ்சல் உற்சவம்

ஆடி அமாவாசை  தில்லை காளிக்கு சிறப்பு ஊஞ்சல் உற்சவம்

 

ஆடி அமாவாசையை முன்னிட்டு தில்லை காளிக்கு சிறப்பு ஊஞ்சல் உற்சவம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

கடலூர் மாவட்டம், வடலூர் அருகே உள்ள மேட்டுக்குப்பத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பிரம்மமுகி தில்லை காளி அம்மன் திருக்கோவிலில், ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு ஊஞ்சல் உற்சவம் பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.

விழாவையொட்டி, முன்னதாக சிறப்பு மிளகாய் யாகம் நடைபெற்றது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க கற்பூர தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, பக்தர்களின் பக்தி முழக்கத்துடன் அம்மன் தில்லை காளி கருப்புசாமி நடனம் நடைபெற்றது. பின்னர், சுமார் 72 அடி உயரம் கொண்ட ஸ்ரீ தில்லை காளி அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்ட பக்தர்கள் அம்மனை தரிசித்து அருள் பெற்றனர்.

இந்த விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், விழாக்குழுவினரும் சிறப்பாக செய்திருந்தனர்.

What do you think?

நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயில் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றம்

தஞ்சாவூர் பெரிய கோயில் மதில் மேல் சுவரில் சுத்தப்படுத்தல் பணி