in

வேதாரண்யத்தில் ஒன்றிய அரசை கண்டித்து வங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்


Watch – YouTube Click

வேதாரண்யத்தில் ஒன்றிய அரசை கண்டித்து வங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் வடக்கு வீதியில் அமைந்துள்ள
பாரத் ஸ்டேட் வங்கி முன்பு ஒன்றிய அரசை கண்டித்து தமிழ் மாநில விவசாய சங்கம் விவசாய தொழிலாளர் சங்கம், கட்டுமான தொழிலாளர் சங்கம், மீனவர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சிவகுருபாண்டியன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாய விலைப் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நியமிக்க வேண்டும், விவசாயிகள் படுகொலையின் முக்கிய காரணமாக இருந்த உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா தேனியை பதவி நீக்க செய்ய வேண்டும், சிறு, குறு விவசாயிகளுக்கு விடுதலை தரும் வகையில் கடன் நிவாரணம் வழங்க வேண்டும், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் 25 ஆயிரம் வழங்க வேண்டும், பழைய ஓய்வு திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும், ரயில்வே பாதுகாப்பு துறை, மின்சாரம் போன்ற அரசு துறைகளை தனியார் மையமா இருக்கக் கூடாது. ஒப்பந்த தொழிலாளர் முறையில் ரத்து செய்ய வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை கொடுத்து நாள் ஒன்றுக்கு 600 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

தஞ்சை ரயில் நிலையத்தில் சோழன் விரைவு ரயிலை விவசாயிகள் மறித்து ஆர்ப்பாட்டம்

வேதாரண்யத்தில் ஒன்றிய அரசை கண்டித்து வங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.