தெய்வானை சமேத அருள்மிகு அருள் முருகன் திருக்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஓசூர் அருள் முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை சிறப்பு பூஜை
ஓசூரில் அமைந்துள்ள வள்ளி தெய்வானை சமேத அருள்மிகு அருள் முருகன் திருக்கோவிலில், ஆடி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
விழாவையொட்டி முருகப்பெருமானுக்கு பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடைபெற்றன
.
இதையடுத்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்து வழிபட்டனர். விழாவின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது

