in

சிதம்பரத்தில் கூலி தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு; குற்றவாளி கைது

சிதம்பரத்தில் கூலி தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு; குற்றவாளி கைது

சிதம்பரம் காரிய பெருமாள் கோயில் தெருவில் வசித்து வருபவர் கோவிந்தராஜ் (34). கூலி தொழிலாளியான இவர், கடந்த வாரம் தனது குழந்தைகளை சைக்கிளில் அழைத்துச் சென்றபோது அதே பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான ராகுல்சாமி என்பவர் தகராறு செய்து தாக்கி உள்ளார்.

இந்நிலையில் இன்று காலை ராகுல்சாமி, கோவிந்தராஜன் வீட்டிற்கு சென்று தூங்கிக் கொண்டிருந்த அவரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடி விட்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிதம்பரம் நகர போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். பின்னர் காயமடைந்த கோவிந்தராஜ் சிகிச்சைக்காக சிதம்பரத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவ குறித்து கோவிந்தராஜ் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் ராகுல்சாமியை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

What do you think?

கோவையில் மறைந்த நடிகர் பாக்யராஜ் வழியில், விழிகள் தானம்

கோவை எஸ்.பி.யிடம் நடவடிக்கை கோரி புகார் மனு