in

மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தேர்தல் விழிப்புணர்வுக்காக அணி வகுப்பு


Watch – YouTube Click

மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தேர்தல் விழிப்புணர்வுக்காக அணி வகுப்பு

 

தமிழகத்தில், ஏப்.,19-ல், நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு, தேர்தல் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆயுதம் ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் போலீசர்களின் அணிவகுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, பொதுமக்கள் அச்சமின்றி சுதந்திரமாக தங்கள் வாக்குகளை பாதுகாப்புடன் செலுத்தும் வகையில் ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட செஞ்சியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை (டெல்லி)வீரர்கள் மற்றும் போலீசார் ஆயுதம் ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அணிவகுப்பு நடத்தினர்.

நான்கு கிலோ மீட்டர் நடைபெற்ற இந்த அணிவகுப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் அவர்களின் உத்தரவின் பேரில் செஞ்சி துணை கண்காணிப்பாளர் கவினா தலைமையில் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தொடங்கிய இந்த பேரணி திருவண்ணாமலை சாலை, தேசூர் பாட்டை சாலை,செஞ்சியின் முக்கிய வீதியான காந்தி பஜார், பேருந்து நிலையம் வழியாக சென்று செஞ்சி நான்கு முனை கூட்டு ரோடு வரை நடைபெற்றது.

செஞ்சி சரக போலீசார், காவல் ஆய்வாளர்கள் பார்த்தசாரதி, அப்பண்டராஜ், எழிலரசி வினதா, விஜி மற்றும் துணை காவல் ஆய்வாளர்களுடன் மத்திய தொழில் பாதுகாப்புபடை வீரர்களின் ஆய்வாளர் ஜெயசீஷ் உடன் ஆயுதம் ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட, 200க்கும் மேற்பட்டோர் இந்த அணிவகுப்பில் பங்கேற்றனர்.


Watch – YouTube Click

What do you think?

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கட்சி கொடிகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்

மத்திய அரசே பொறாமைப்படும் திராவிட மாடலின் தேர்தல் அறிக்கை