in

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கட்சி கொடிகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்


Watch – YouTube Click

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கட்சி கொடிகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்

 

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கட்சி கொடிகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்….. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு அனைத்து கட்சிக் கொடிகள் தயாரிக்கும் பணி மும்முரம்…

விருதுநகர் மாவட்டம், தேர்தல் என்றாலே, கட்சியினர் முதல் கடைக்கோடி தொண்டன் வரை கரைவேட்டி, கட்சிக்கொடி, தொப்பி, சின்னம் என எல்லாம் அதகளப்படும். அதன்பொருட்டு பிரசாரத்திற்கு தேவையான துண்டு பிரசுரம் முதல் சுவரொட்டிகள், பேனர்கள் அச்சிடும் பணிகளும் சூடுப்பிடிப்பது வழக்கம்.

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் “குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசியில் தற்போது அரசியல் கட்சிகளின் பிளக்ஸ், தொப்பி மற்றும் சின்னங்கள் பொறித்த அட்டை மற்றும் பிளாடிக் மாஸ்க் உள்ளிட்டவைகளை அச்சடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

அதன்படி, தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ், மாநில கட்சிகளான அதிமுக, திமுக, பாமக உள்ளிட்ட கட்சி பாகுபாடு இல்லாமல் இல்லாமல் அனைத்து கட்சிகளின் வரவேற்பு பேனர்கள், கட்சிகொடிகள், சின்னம், தோரணங்கள், துண்டு, தொப்பி ஆகியவை என அந்தந்த கட்சிகளின் வண்ணங்களின் அச்சிட்டு தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

இதில் குறிப்பாக புதுவரவாக ஸ்டார் வடிவுலான கொடிகள் அனைத்து கட்சியினரிடையே வரவேற்பை பெற்று வருகிறது‌.

இதுகுறித்து வியாபாரிகள் தெரிவிக்கையில், “ஒரு ஸ்டார் கொடியின் விலை ரூ. 2.50 பைசா தான். மேலும் 30 வகையான கொடிகள் அனைத்தும் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தாமல் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் துணிகளை வைத்து தயாரிப்பதுதான் சிறப்பம்சமாகும்.

மேலும் தேர்தல் சமயத்தில் தான் சிவகாசியில் உள்ள அச்சக உரிமையாளருக்கும் விற்பனையாளர்களுக்கும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில் இருந்து கட்சிக்கொடி தயார் செய்வதற்கு ஆர்டர் கொடுப்பார்கள்.

ஆனால், தற்பொழுது கட்சிக் கொடிகளின் ஆர்டர்கள் மந்தமாக உள்ளது முன்னனி கட்சிகள் தங்கள் கூட்டணியை அறிவித்த பிறகுதான் தேர்தல்களம் சூடு பிடிக்கும் எனவும் அதற்கு பிறகு கட்சிக்கொடிகள் தயாரிக்கும் பணி தீவரமடைய என்றும் அந்த சமயத்தில் இந்த தொழிலை நம்பி உள்ளவர்களின் வாழ்வாதாரம் ஒரு படி முன்னேற்றம் அடையும் என்றும் உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தெரிவித்தார்கள்.


Watch – YouTube Click

What do you think?

ஸ்ரீவில்லிபுத்தூரில் மர்ம காய்ச்சலுக்கு ஒரு குழந்தை பலியான நிலையில் சுகாதாரப் பணிகள் தீவிரம்….

மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தேர்தல் விழிப்புணர்வுக்காக அணி வகுப்பு